தமிழகம் முழுவதும் ஜேக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளி ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒருவார காலமாக நடைபெறும் இப்போராட்டத்தின் காரணமாக பள்ளி செயல்பாடுகள் முற்றிலும் தடைபட்டுள்ளது.
இந்நிலையில், 12-ஆம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வு ஏற்கனவே அறிவித்தபடி வரும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 1) தொடங்கும் என தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தரா தேவி கூறியுள்ளார்.
தேர்வுத் துறை பணியாளர்களின் போராட்டத்தால் இத்தேர்வுப் பணிகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
For Quick Alerts
For Daily Alerts