பள்ளி மாணவியை பீரோவில் வைத்துப் பூட்டிய ஆசிரியர்.. வாட்ஸ்அப் வைரல் ஆடியோ..!

Posted By:

சென்னை : பள்ளியில் ஆசிரியர் கேட்ட கேள்விக்கு சரியாக பதில் தராத மாணவி அடிக்கப்பட்டார் அதனால் மயக்கமுற்றார். மயக்கமுற்ற மாணவியை ஆசிரியர் பீரோவில் அடைத்து வைத்து பின்பு கிணற்றில் வீசினார்.

மாதா பிதா குரு தெய்வம் என்றுதான் நாம் பிள்ளைகளுக்குச் சொல்லித் தருகிறோம். அப்பா அம்மாவுக்கு அடுத்து ஆசிரியரைத் தான் பெரிதாக பேசுகிறோம். தெய்வம் கூட அடுத்துத்தான் என நாம் பிள்ளைகளுக்குக் கற்றுத் தருகிறோம்.

ஒரு சில ஆசிரியர்கள் செய்யும் தவறினால் அனைவருக்கும் கெட்டப் பெயர் வருகிறது. எத்தனையோ நல்ல ஆசிரியர்கள் இருந்து கொண்டு இருக்கின்ற இந்த உலகத்தில் இதுபோன்ற ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

மயக்குமுற்ற மாணவி

ஒரு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் கேட்ட கேள்விக்கு மாணவி ஒழுங்காக பதில் சொல்லவில்லை என்பதற்காக அந்த மாணவியை ஆசிரியர் அடித்துள்ளார். அது தவறுதலாக தலையில் பட்டு மாணவி மயக்கமடைந்துள்ளார். மயக்கமடைந்த மாணவியை ஆசிரியர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்க வேண்டும் அல்லது தலைமை ஆசிரியருக்கு தெரிவித்து மருத்துவரை வரவழைத்து இருக்க வேண்டும்.

பீரோவில் வைத்து பூட்டிய ஆசிரியர்

ஆனால் அந்த ஆசிரியர் மயக்கமுற்ற குழந்தையை பீரோவில் வைத்து பூட்டிவிட்டார். இதுவே தன்னுடைய குழந்தையாக இருந்தால் இவ்வாறு செய்வார்களா? ஆசிரியர் படித்தவர், பீரோவில் வைத்து பூட்டுவதினால் விளைவு என்ன ஏற்படும் என்பதை அறிந்தவர் இவ்வாறு செய்யலாமா? மயக்குமுற்ற குழந்தையை உடனே மருத்துமனைக்கு அழைத்து சென்று இருந்தால் மாணவி நன்றாக இருந்திருப்பார். தலைமை ஆசிரியரும் இனிமேல் இப்படி யாரையும் அடிக்காதீர்கள் என்று கண்டித்து விட்டிருப்பார்.

மனம் பதறும் சம்பவம்

அதிகபட்சம் வேலை வேண்டுமானால் ஆசிரியருக்கு போயிருக்கும். ஆனால் இன்று மாணவியின் உயிர் போய்விட்டது. அதை திருப்பிக் கொடுக்க முடியுமா?
பீரோவில் வைத்த பெண்ணை தூக்கி பக்கத்து பள்ளியில் உள்ள கிணற்றில் தூக்கி எறிய எப்படி மனது வந்தது. நினைத்தாலே மனம் பதறுகிறது. ஒவ்வொரு பெற்றோர்களும் ஆசிரியரை நம்பித்தானே தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

ஆசிரியரின் கொடூரச் செயல்

பள்ளிக்குச் சென்ற குழந்தையை அடித்து பீரோவில் பூட்டி வைத்து, கிணற்றில் வீசிய ஆசிரியரின் கொடூரச் செயல் அனைவரையும் அலறவைத்துள்ளது.
மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிக்க உரிமை உள்ளது. ஆனால் அது அவர்கள் உயிரைப் பறிக்கும் அளவிற்குப் போகக் கூடாது. மேலும் ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பதனால் வளைப்பதற்கு பதிலாக முறித்து அவர்களின் வாழ்வை வீணடித்து விடக்கூடாது.

English summary
The teacher who locked the school student in the bureau, whatsapp viral audio is spreading for last two days. It's a terrifying audio.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia