2017 ஐ.ஐ.டி கலந்தாய்வுக்கு தடை விதிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

சென்னை : ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வு தொடர்பாக வேலூரை சேர்ந்த மாணவர் விஷ்ணு பலராம் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் சார்பில் சென்னை வக்கீல் தங்க சிவன் தாக்கல் செய்த மனுவில் 2017ம் ஆண்டுக்கான ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வில் இந்தி மொழியில் தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சலுகை மதிப்பெண் வழங்குவதற்கு பதிலாக, அனைத்து மாணவர்களுக்கும் சலுகை மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் தேர்வை சரியாக எழுதிய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வை நடத்தும் ஆணையத்துக்கு இரு கடிதங்கள் எழுதியும் எவ்வித நியாயமும் வழங்கப்படவில்லை.

 2017 ஐ.ஐ.டி கலந்தாய்வுக்கு தடை விதிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

 

எனவே 2017ம் ஆண்டுக்கான ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வு தொடர்பான தகுதி பட்டியலை ரத்து செய்து மீண்டும் மதிப்பெண்களை சரியான முறையில் கணக்கிட உத்தரவிட வேண்டும். அது வரை கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள், ஏ.எம்.சப்ரே, சஞ்ஜய் கிஷன்கவுல் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் தங்க சிவன், இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கில் மத்திய மனிதவள மேம்பாட்டுததுறை மற்றும் ஐ.ஐ.டி தேர்வாணையம் ஆகியவை சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கு 7ந் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர். .

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Above article mentioned that the Supreme Court has filed a petition to ban IIT's 2017 Counselling.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X