ஐஏஎஸ் மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சிறப்பு பயிற்சி

Posted By:

சென்னை : மத்திய அரசு பணியாளர் தேர் வாணையம் (யுபிஎஸ்சி) சிவில் சர்வீசஸ் பணிகளுக்காக நடத்தும் நேர்காணலை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் வகையில் முதன்மை தேர்வில் தகுதி பெற்ற தமிழ் நாட்டை சார்ந்த மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

முதன்மை தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொருட்டு அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையத்தில் மாதிரி ஆளுமைத் தேர்வும், சிறப்பு வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது.

மத்திய அரசு பணியாளர் தேர் வாணையம் (யுபிஎஸ்சி) சிவில் சர்வீசஸ் பணிகளுக்காக நடத்தும் நேர்க்காணலை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளுவதற்காக சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

சிறப்பு வகுப்புகள்

அந்த வகையில், இந்த வருடம் மெயின் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஏப்ரல் 7-ம் தேதி பேராசிரியர் கே.எம்.பதி, மற்றும் ஏப்ரல் 9-ம் தேதி ஐஏஎஸ் அதிகாரி டி.உதயச்சந்திரன் ஆகியோரைக் கொண்டு ஆளுமைத் தேர்வு தொடர்பான சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

மாதிரி ஆளுமைத் தேர்வு

மேலும், ஏப்ரல் 8 (காலை மற்றும் பிற்பகல்), ஏப்ரல் 9 (பிற்பகல்), ஏப்ரல் 10 (காலை மற்றும் பிற்பகல்) ஆகிய தேதிகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மூலமாக மாதிரி ஆளுமைத் தேர்வு வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம்

ஆளுமைத் தேர்வில் கலந்து கொள்பவர்கள் டெல்லிக்கு செல்ல வேண்டும். டெல்லிக்குச் செல்லும் தமிழக மாணவர்களுக்கு பயணப் படியாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. அத்துடன் அவர்கள் 10 நாட்கள் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்து தேர்வில் கலந்து கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் செய்து தருகிறது.

கூடுதல் விபரங்கள்

மாதிரி ஆளுமைத் தேர்வு பற்றிய கூடுதல் விவரங்களை www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

மேலும், விவரங்கள் தேவைப்பட்டால் 044-24621475 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

 

English summary
The state government of Tamil Nadu has arranged to conduct a special training course for attending the interview session for all the Tamil Nadu candidates who were successful in the IAS Main examinations.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia