திருச்சியில் மே 20ல்.. இந்திய விமானப்படை வீரர்கள் தேர்வு!

Posted By:

திருச்சி : இந்திய விமானப்படை வீரர்கள் தேர்வு திருச்சியில் மே 20ந் தேதி நடைபெறும் என இந்திய அரசின் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.

இந்திய விமானப்படைக்கு தேவையான விமானப்படை வீரர்கள் தேர்வு திருச்சியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வரும் 20ந் தேதி மற்றும் 22ந் தேதிகளில் நடைபெற விருக்கிறது.

1997ம் ஆண்டு ஜூலை 7-ந் தேதி முதல் 2000ம் ஆண்டு டிசம்பர் 20ந் தேதி வரை பிறந்த திருமணம் ஆகாத இந்திய ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். பிளஸ்-2 வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பதுடன், ஆங்கிலத்திலும் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

திருச்சியில் மே 20ல்.. இந்திய விமானப்படை வீரர்கள் தேர்வு!

தேர்வுக்கு வரும் போது பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்ச்சி பெற்றதற்கான உண்மை சான்றிதழை கொண்டு வர வேண்டும். கல்லூரிகளில் உண்மை சான்றிதழ் வழங்கப்பட்டு இருந்தால், நகல் சான்றிதழில், தேர்வாளர்கள் தான் கையொப்பம் போட்டிருப்பதுடன், பள்ளி கல்லூரி முதல்வர்களிடமும் கையொப்பம் வாங்கி வரவேண்டும்.

இந்திய விமானப்படை வீரர்கள் தேர்வு மாவட்ட வாரியாக நடைபெறுகிறது. வரும் 20ந் தேதி காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை தமிழகத்தில் உள்ள மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கிருஷ்ணகிரி, திருச்சி, விழுப்புரம், சேலம், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை, கடலூர், திருவாரூர், கரூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கான தேர்வு நடக்கிறது.

மே 22ந் தேதி காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை வேலூர், கன்னியாகுமரி, தேனி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், திண்டுக்கல், தர்மபுரி, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், திருப்பூர், நாமக்கல், ஈரோடு, அரியலூர், நீலகிரி மற்றும் பெரம்பலூரைச் சேர்ந்தவர்களுக்கான தேர்வு நடக்கிறது.

இணையதள முகவரி

கூடுதல் தகவல்களை பெற www.airmenselection.gov.in என்ற இணையதள முகவரி அனுகவும் அல்லது 044-2239 0561 மற்றும் 044-2239 5553 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

English summary
The Indian Defense Ministry announced that the selection of Indian Air Force will be held in Trichy on May 20.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia