6 ஆயிரம் பள்ளிகளுக்கு அங்கீகாரம்....... பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு.....!

Posted By:

சென்னை : தமிழகத்தில் நர்சரி, பிரைமரி மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அங்கீகாரம் கேட்டு தொடக்கப்பள்ளி இயக்குனர், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனருக்கு விண்ணப்பித்து உள்ளன.

இதில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் இட வசதி போதாத பள்ளிகள் 740 உள்ளன.
இந்த பள்ளிகள் தவிர 3 ஆயிரம் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அங்கீகாரம் கேட்டு மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனரகத்திற்கு  விண்ணப்பங்கள் அனுப்பி உள்ளன.

3 ஆயிரம் நர்சரி, பிரைமரி பள்ளிகள் தொடக்கப் பள்ளி இயக்குனருக்கு அங்கீகாரம் கேட்டு விண்ணப்பங்கள் அனுப்பி உள்ளன. அங்கீகாரம் இல்லாத பள்ளியில் பயிலும் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத முடியாது.

6 ஆயிரம் பள்ளிகளுக்கு அங்கீகாரம்....... பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு.....!

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத அந்த பள்ளிகள் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் என்பதாலும் அவர்கள் பெறும் கல்வி சான்றிதழ் தகுதி உடையாதாக இருக்க வேண்டும் என்பதாலும் தகுதி உடைய பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

எனவே தகுதி உடைய நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு 2018 மே 31ந் தேதி வரை அங்கீகாரம் வழங்க பள்ளிக் கல்வித்துறை செயலாளர் த. உதயச் சந்திரன் உத்தரவிட்டார்.

அதன் படி மாணவர்கள் நலன் கருதி 3 ஆயிரம் நர்சரி, பிரைமரி பள்ளிகள் மற்றும் 3 ஆயிரம் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என மொத்தம் 6 ஆயிரம் பள்ளிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட உள்ளன.

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் உள்ள மாணவ மாணவியர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தகுதி உடைய மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மற்றும் நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் கூறியுள்ளார். இந்த அங்கீகாரம் மே 31ந் தேதி 2018ம் தேதி வரை வழங்கப்படுகிறது.

English summary
The school education department has approved 6 thousand schools. 3 thousand nursery, primary schools and 3 thousand matriculation schools.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia