பிளஸ்2 தேர்ச்சி தொடர்பாக விளம்பரம் செய்த பள்ளிகளை சும்மா விடமாட்டோம்... பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Posted By:

சென்னை : பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயச் சந்திரன் விதிமுறைகளை மீறிய தனியார் பள்ளிகள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

பிளஸ்2 மற்றும் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் இந்த ஆண்டு முதல் ரேங்க் பட்டியல் கிடையாது என்றும் மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்திய முறை ரத்து செய்யப்பட்டதாகவும பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையனும், செயலாளர் உதயச் சந்திரனும் தெரிவித்தனர்.

பிளஸ்2 தேர்ச்சி தொடர்பாக விளம்பரம் செய்த பள்ளிகளை சும்மா விடமாட்டோம்... பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

அதன்படி கடந்த 12ந் தேதி பிளஸ்2 தேர்வு முடிவு ரேங்க் படடியல் இல்லாமல் வெளியிடப்பட்டது. இதே முறையை பின்பற்றியே 10ம் வகுப்புத் தேர்வு முடிவும் நேற்று வெளியிடப்பட்டது.

பெற்றோர்களின் ஆதரவு

மாணவர்களின் மன அழுத்தத்தை போக்குவதுடன், பள்ளிகளுக்கு இடையே ஏற்பட்ட கடும் போட்டிகளை தவிர்ப்பதற்காகவும் கொண்டுவரப்பட்ட இந்த புதிய முறைக்கு பெரும்பாலான பெற்றோர், மாணவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

பிளஸ்2 தேர்ச்சி விளம்பரம்

அதேபோல் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி, பிளஸ்2 தேர்வில் தங்கள் பள்ளி அதிகமான மதிப்பெண் பெற்று இருக்கிறது என்பது போன்ற அறிவிப்பையோ, விளம்பரத்தையோ வெளியிடக்கூடாது என்றும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நேற்று சில நாளிதழ்களில் சில பள்ளிகள் பிளஸ்2 தேர்ச்சி தொடர்பாக விளம்பரம் வெளியிட்டு இருந்தன.

நோட்டீஸ் அனுப்பப்படும்

அரசு ஆணை விதிமுறைகளை மீறி இதுபோன்னு விளம்பரங்களை தனியார் பள்ளிகள் கொடுத்து இருக்கிறார்கள். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். விளம்பரம் கொடுத்துள்ள பள்ளிகளின் நிர்வாகத்துக்கு உடனடியாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்.

பள்ளி அங்கீகாரம் ரத்து

சம்பந்தப்பட் பள்ளிகள் அரசு ஆணை விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டது ஏன்? என 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும், அவர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். அதிகப்பட்சமாக சம்பந்தப்பட்ட பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

English summary
School Education Secretary Udayachandran has said that action will be taken against private schools that have violated the rules.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia