தமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்துத் தேர்வு 2017 நேற்று நடைபெற்றது... கேள்வித்தாள் கடினம்

Posted By:

சென்னை : 3 ஆயிரத்து 3 ஆயிரத்து 375 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வுக்கு 2 லட்சத்து 18 ஆயிரத்து 491 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல்,வணிகவியல், வரலாறு, பொருளாதாரம், புவியியல், அரசியல், அறிவியல், உயிரிவேதியியல், நுண்உயிரியல், மனை அறிவியல், தெலுங்கு, உடற் பயிற்சி இயக்குனர்கள் (கிரேடு - 1) ஆகிய 17 பாடஙகளுக்கு நேற்று எழுத்து தேர்வு நடைபெற்றது.

தேர்வு எழுத வந்தவர்கள் கைக்கடிகாரம் கட்டிச் செல்ல அனுமதிக்கவில்லை. செல்போன உள்ளிட்ட சாதனங்களுக்கு தடை விதிக்கப்பட்டன. பைகள் வைக்க தனி அறை ஒதுக்கப்பட்டது. தேர்வு நேற்று காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற்றது.

சென்னை முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்துத் தேர்வு

சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாடியில் தேர்வு எழுதிவிட்டு கீழே வந்தனர். அவர்கள் வெளியே செல்லாத வகையில் கேட்டை இழுத்து பாதுகாப்புக்கு இருந்த போலீஸ் பூட்டினர்.இதுக்குறித்து தேர்வு எழுத வந்தவர்கள் போலீசாரிடம் கேட்ட போது ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுதிவிட்டு வந்தவர் அவர் பையையும் அடுத்தவர் பையையும் எடுத்துச் சென்றுவிட்டார். அதில் செல்போன் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் இருந்தன. எனவே அவரவர் பையை அவரவர் தங்களது பொருட்களை சரிப்பார்த்து எடுததுச் செல்ல ஏற்பாடு செய்கிறோம் என்றனர்.

வினாத்தாள் கடினம்


தேர்வு முடித்து வெளியே வந்தவர்களிடம் தேர்வுக் குறித்து கேட்டதற்கு தேர்வு கடினமாக இருந்ததாக தெரிவித்துள்ளனர். இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள், மொத்தம் 3 ஆயிரத்து 375 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு 2 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துளளனர். பணியிடங்களுக்கு ஏற்ப அவர்களை தேர்வு செய்ய வேண்டிய இருப்பதால், பலரை வடிகட்ட வினாக்கள் கடினமாக தேர்வு செய்யப்பட்டன என்றார்.

திருநெல்வேலி முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்துத் தேர்வு


நெல்லையில் பாளையங்கோட்டை மேரி சார்ஜென்ட் பெண்கள் மேல்நிலை, சாராள் தக்கர் மேல்நிலைப்பள்ளி, டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளி உள்பட 22 மையங்களில் முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. 8 ஆயிரத்து 245 பேர் தேர்வு எழுத ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தனர். ஆனால் 7 ஆயிரத்து 367 பேர் தேர்வு எழுதினர்.

தேர்வுத் தாளில் குழப்பம்


பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் தேர்வு எழுத வந்த மூவருக்கு தேர்வுத்தாள் மாற்றி கொடுக்கப்ட்டது. களக்காட்டை சேர்ந்த, பிரபு, ஐந்தாங்கட்டளையை சேர்ந்த வில்சர் எவர்பிரைட், திருமலாபுரத்தை சேர்ந்த அமுதா ஆகிய 3 பேருக்கும் வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டது. வரலாறு பட்டதாரிகளுக்கான இவர்களுக்கு, தமிழ் ஆசிரியர்களுக்கான தேர்வுத்தாள் வழங்கப்பட்டது. வரலாறு பட்டதாரிகளான இவர்களுக்கும், தமிழ் ஆசிரியர்களுக்கான தேர்வு வினாத்தாள் வழங்கப்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் தேர்வு மைய அலுவலர் மற்றும் மேற்பார்வையாளரிடம் இதுக்குறித்து முறையிட்டனர்.

தேர்வு வாரியம் விளக்கம்

தேர்வு மைய அலுவலர் இந்த தேர்வு மையம் தமிழ் பாட ஆசிரியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. எனவே ஒன்றும் செய்ய முடியாது எனறு கூறினார். இதனால் அவர்கள் தேர்வு மையத்தை விட்டு வெளியேறினர். இதே போல் மற்றொரு பள்ளியில் வணிகவியல் பாடத்திற்குப் பதிலாக ஆங்கிலப்பாட வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது. இதே போல் ஆங்காங்கே வினாத்தாள் மாறி கொடுக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து ஆசிரியர் தேர்வு அதிகாரிகள் கூறுகையில் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு கோடு எண் கொடுக்கப்பட்டு இருந்தது. உதரணமாக தமிழுக்கு 01, ஆங்கிலத்துக்கு 02, என வரிசையாக ஒவ்வொரு பாடத்துக்கும் எண் கொடுக்கப்பட்டிருந்தது. விண்ணப்பிக்கும் போது எண் மாற்றி கொடுக்கப்பட்டிருந்தால் அந்த எண்ணுக்குரிய வினாத்தாள்தான் ஒதுக்கப்பட்டிருக்கும். எனவே இதில் தேர்வு வாரியத்தின் தவறு இருக்காது எனக் கூறியுள்ளனர்.

English summary
Above article mentioned that the question is difficult in PG TRB exam 2017.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia