தேசிய தரவரிசை பட்டியலில் முதல் இடம் பிடித்தது சென்னை ஐஐடி!

Posted By:

சென்னை : தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு 2017ம் ஆண்டிற்கான தரவரிசை பட்டியலை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று (ஏப்ரல் 3) திங்கட்கிழமை வெளியிட்டுள்ளார்.

தேசிய தர வரிசை நிறுவனம் இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களை பொறியியல், மேலாண்மை, மருந்தியல் மற்றும் பல்கலைக் கழகங்கள் நான்கு வகைகளாகப் பிரித்து தனித்தனியே தரவரிசைப் பட்டியலைத் தயாரித்து வெளியிட முடிவு செய்து 2016ம் ஆண்டு (கடந்த வருடம்) முதன்முதலில் தேசிய தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய தரவரிசை பட்டியலில் முதல் இடம் பிடித்தது சென்னை ஐஐடி!

தரவரிசைப்பட்டியலில் கல்வி நிறுவனங்களின் கற்றல், கற்பித்தல் மற்றும் அதற்குத் தேவையான வளங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சி, ஆலோசனை மற்றும் கூட்டுச் செயல் திறன் போன்ற பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட பின்பு தேசிய தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படுகிறது.

2017ம் ஆண்டு தேசிய தரவரிசை பட்டியல் விபரங்கள்

முதல் 10 இடத்தைப் பிடித்த கல்வி நிறுவனங்கள்

1. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அறிவியல் (ஐஐஎஸ்சி) பெங்களூர்

2. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் தொழில்நுட்பம் (ஐஐடி) சென்னை

3. ஐஐடி பாம்பே

4. ஐஐடி காரக்பூர்

5. ஐஐடி டெல்லி

6. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், புது டெல்லி

7. ஐஐடி கான்பூர்

8. ஐஐடி குவஹாத்தி

9. ஐஐடி ரூர்க்கி

10. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்

முதல் பத்து இடத்தைப் பிடித்த 10 பல்கலைக்கழகங்கள்

1. ஐஐஎஸ்சி, பெங்களூர்

2. ஜவகர்லால் நேரு கல்லூரி, புது டெல்லி

3. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்

4. ஜவகர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையம்

5. ஜாதவ்பூர் பல்கலைக்கழகம்

6. அண்ணா பல்கலைக்கழகம்

7. ஹைதெராபாத் பல்கலைக்கழகம்

8. டெல்லி பல்கலைக்கழகம்

9. அம்ரிதா விஸ்வா வித்யாபீடம்

10. சாவித்ரிபாயி பூலே புனே பல்கலைக்கழகம்

முதல் பத்து இடத்தை பிடித்த கல்லூரிகள்

1. மிராண்டா ஹவுஸ், புது டெல்லி

2. லயோலா கல்லூரி, சென்னை

3. . ஸ்ரீ ராம் காலேஜ் வர்த்தக கல்லூரி, புது டெல்லி

4. பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சி

5. ஆத்மா ராம் சனாதன் தர்மா கல்லூரி, புது டெல்லி

6. புனித சேவியர் கல்லூரி, கொல்கத்தா

7. லேடி ஸ்ரீ ராம் பெண்கள் கல்லூரி, புது டெல்லி

8. தயாள் சிங் கல்லூரி, புது டெல்லி

9. தீன் தயாள் உபாத்யாயா கல்லூரி, புது டெல்லி

10. பெண்கள் கிரிஸ்துவ கல்லூரி, சென்னை

முதல் இடத்தைப் பிடித்த 10 மேலாண்மை கல்வி நிறுவனங்கள்

1. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட், அகமதாபாத்

2. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட், பெங்களூர்

3. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட், கல்கத்தா

4. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட், லக்னோ

5. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட், கோழிக்கோடு

6. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, டெல்லி

7. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கரக்பூர்

8. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ரூர்க்கி

9. சேவியர் லேபர் ரிலேஷன்ஸ் இன்ஸ்டிடியூட்

10. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் இண்டோர்

முதல் பத்து இடத்தைப் பிடித்த 10 பொறியியல் கல்லூரிகள்

1. ஐஐடி சென்னை

2. ஐஐடி பாம்பே

3. ஐஐடி காரக்பூர்

4. ஐஐடி டெல்லி

5. ஐஐடி கான்பூர்

6. ஐஐடி ரூர்க்கி

7. ஐஐடி குவஹாத்தி

8. அண்ணா பல்கலைக்கழகம்

9. ஜாதவ்பூர் பல்கலைக்கழகம்

10. ஐஐடி ஹைதெராபாத்

English summary
the lists of the top educational institutions in the country as announced by the Ministry of Human Resource Development (HRD) on Monday. The HRD has adopted the National Institutional Ranking Framework, which ranks the best colleges and universities in India.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia