பிபிஏ, பிசிஏ படிப்புகளுக்கு அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

பிபிஏ, பிசிஏ படிப்புகளுக்கு மாநிலங்களில் உள்ள பல்வேறு கல்லூரிகள் அங்கீகாரம் கோரி விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான கூடுதல் தகவல்களைப் பெற www.aicte.india.org என்ற இணையதளம் வழியாக தொடர்புகொள்ளலாம்.
இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) வெளியிட்ட செய்திக்குறிப்பில்

கூறியுள்ளதாவது:

2024-25 கல்வியாண்டுக்கான பிபிஏ, பிஎம்எஸ், பிசிஏ படிப்புகளை வழங்கும் உயர்கல்வி நிறுவனங்கள், ஏஐசிடிஇ அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அனுமதி பெற்றால் மட்டுமே ஏஐசிடிஇயின் திட்டங்கள் மற்றும் அதன் பலன்களை பெற முடியும். இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும், கல்லூரிகள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக நாடு முழுவதும் 100 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பிபிஏ, பிசிஏ படிப்புகளுக்கு அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

இதனிடையே, பிபிஏ, பிசிஏ படிப்புகளுக்கு இணையதள வழியில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் (பிப்ரவரி 26) நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது கல்லூரிகளின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி www.aicte.india.org என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.

இதுதொடர்பான கூடுதல் விவரங்களை கல்வி நிறுவனங்கள் மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். அதேநேரம் மத்திய, மாநில அரசு பல்கலைக்கழகங்கள் இந்த அனுமதியை பெறத் தேவையில்லை. எனினும், ஏஐசிடிஇ திட்டங்களை பெற விரும்பினால் மட்டும் அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The 3/4 year Bachelor of Computer Applications (BCA) program covers Computer Science, Programming, Software Development etc. and is open for 2024 admission at IMTS Institute, Mangalayatan University with extended application deadlines of 15 March 2024. Eligibility requires 50% aggregate scores in 12th standards. Admissions are based on exams like CUET UG, SET, IPU CET, MET, NIMCET or merit.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+