நீட் தேர்விற்கு தாமதமாக விண்ணப்பித்த 38 பேருக்கு அனுமதி.... உயர்நீதிமன்றம் உத்தரவு......

Posted By:

சென்னை : நீட் தேர்விற்கு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உரிய நேரத்தில் விண்ணப்பிக்க முடியாத 38 மாணவர்களின் விண்ணப்பங்களை அனுமதிக்க வேண்டும் என சிபிஎஸ்இக்கு சென்னை உயர்நீத் மன்றம் உத்தரவிட்டுள்ளது.

மே மாதம் 7ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க மார்ச் 1ம் தேதியோடு கால அவகாசம் முடிந்த நிலையில் உச்ச நீதி மன்றம் ஏப்ரல் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நீட் தேர்விற்கு விண்ணப்பிக்காத மாணவ மாணவியர்கள் அனைவரும் அந்த 5 நாள் அவகாசத்தைப் பயன்படுத்தி நீட் தேர்விற்கு விண்ணப்பித்துள்ளனர்.

நீட் தேர்விற்கு தாமதமாக விண்ணப்பித்த 38 பேருக்கு அனுமதி.... உயர்நீதிமன்றம் உத்தரவு......

விண்ணப்பித்த மாணவர்களில் 38 மாணவர்களின் விண்ணப்பங்கள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உரிய நேரத்தில் சிபிஎஸ்இ இணையதளத்தை சென்றயடைய வில்லை என்ற காரணத்தினால் அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட மாணவ மாணவியர்கள் இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சென்னை உயர்நீதி மன்றம் 38 மாணவர்களின் விண்ணப்பங்களை அனுமதிக்க கோரி தீர்ப்பு அளித்துள்ளது.

இதுக் குறித்து உயர்நீதிமன்றம் சிபிஎஸ்இக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உரிய நேரத்தில் விண்ணப்பிக்க முடியாத 38 மாணவர்களின் விண்ணப்பங்களை கட்டாயம் அனுமதிக்கவேண்டும் என உயர்நீதி மன்றம் கூறியுள்ளது. இதை மீறி நடந்தால் சிபிஎஸ்இயின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது.

English summary
The High Court has given permission to the applicants for delayed neet exam due to technical difficulties.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia