சென்னை : 2017-2018ம் ஆண்டு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள இளநில பட்டப்படிப்புகளுக்கான 380 இடங்களுக்கு பிளஸ்2 மதிப்பெண் அடிப்டையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இந்த படிப்புகளுக்கு www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான நடை முறை நேற்று முதல் தொடங்கியுள்ளது. வருகிற 31ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.

இணையதளத்தில் பதிவு செய்த விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, தலைவர் சேர்க்கைக்குழு (இளநிலை பட்டப்படிப்பு) தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால்பண்ணை, சென்னை 51 என்ற முகவரிக்கு ஜூன் மாதம் 7ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும். ஜூன் மாதம் 30ந் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பபடும். முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை மாதம் 19, 20 மற்றும் 21ந் தேதி நடைபெறும்.
இந்த கல்வி ஆண்டில், சென்னை, நெல்லை ஒரத்தநாடு ஆகிய இடங்களில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிகளில் தலா 20 இடங்களும், ஒசூர் கோழியின் உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரியில் 20 இடங்களும் என மொத்தம் 80 இடங்களுக்கு தமிழக அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தால் இந்த கல்வியாண்டிலேயே கூடதல் இடங்களுக்கும் மாணவர் சேர்கை நடைபெறும்.
கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன்படி கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புக்கான காலம் கூடுதலாக 6 மாதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 5 வருடம் இருந்த கால்நடை மருத்துவப் படிப்பு வருகிற கல்வியாண்டு முதல் 5 1/2 ஆண்டாக மாறுகிறது. இதனை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் திலகர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications












