பிளஸ் 1 பாடத்தையும் படிச்சே ஆகனும்..... அடுத்த ஆண்டு முதல் பொதுத் தேர்வு...!

Posted By:

சென்னை : அடுத்த ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்பிற்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வைப் போல் 11ம் வகுப்பிற்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுக் குறித்த அரசு ஆணை விரைவில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 1 பாடத்தையும் படிச்சே ஆகனும்..... அடுத்த ஆண்டு முதல் பொதுத் தேர்வு...!

11ம் வகுப்பு பாடங்களை பல பள்ளிகளில் பயிற்றுவிக்காமலேயே 12ம் வகுப்பு பாடத்தை நடத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். இது போன்ற முறைகேடுகள் நடப்பதை தடுக்கும் விதமாக 11ம் வகுப்பு பாடங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அடுத்த வருடம் முதல் பொதுத் தேர்வு 11ம் வகுப்பிற்கும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுக்குறித்து முக்கிய அமைச்சர்கள் மற்றும் முதல் அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும். இதற்கான அரசு ஆணை விரைவில் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பது தாமதமாகுமா என பெற்றோர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுக் குறித்த தகவலும் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

English summary
School Education Minister KA Sengottaiyan has announced that a general examination for Plus 1 will be held from next year.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia