தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுக்கு நாளை ஹால் டிக்கெட் வெளியீடு..!

Posted By:

சென்னை : தொடக்கக்கல்வி (ஆசிரியர் பயிற்சி) பட்டயத் தேர்வுக்கு நாளை முதல் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை நாளை முதல் ஜூலை 5ந் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுக்கு நாளை ஹால் டிக்கெட் வெளியீடு..!

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வு முதலாமாண்டு தேர்வுகள் ஜூன் 29 முதல் ஜூலை 14ந் தேதி வரை நடைபெற உள்ளது.

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வு இரண்டாமாண்டு தேர்வுகள் ஜூன் 28 முதல் ஜூலை 12ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த மாதம் (ஜூன்) நடைபெற உள்ள தொடக்கக்கல்வி பட்டயத் (ஆசிரியர் பயிற்சி) தேர்வுகள் 28.06.2017 தொடங்கி 14.07.2017 வரை நடைபெற உள்ளது. தனித் தேர்வர்களாக முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வு எழுத இவ்வலுவலகத்தால் நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதியான 22.05.2017க்குள் விண்ணப்பிக்க தவறியவர்கள், பின்பு சிறப்பு அனுமதித்திட்டத்தின்  (தட்கல்) மூலம் விண்ணப்பித்தவர்களும் நாளை முதல் ஜூலை 5ந் தேதி வரை ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

English summary
Above mentioned article The diploma teacher education exam hall ticket download from tomorrow.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia