10ம் வகுப்பு தேர்வு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு.... நாளை கடைசி நாள்..!

Posted By:

சென்னை : 10ம் வகுப்பு தேர்வு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நேற்று மாலையுடன் முடிந்து விடும் என அரசு தேர்வுகள் இயக்குனர் அறிவித்திருந்தார்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க 19ந் தேதி முதல் 22ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.
தற்போது மாணவர்களின் நலன் கருதி 2 நாள் காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் மே 24 நாளை மாலை 5.45 மணியுடன் முடிவடைகிறது.

10ம் வகுப்பு தேர்வு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு.... நாளை கடைசி நாள்..!

கடந்த வெள்ளிக்கிழமை 19ந் தேதி 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியது. அதனைத் தொடர்ந்து மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மறுகூட்டலுக்கு நேற்றுடன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண். வசுந்தரா தேவி அறிவித்துள்ளார்.

மாணவர்களின் நலன் கருதி 12ம் வகுப்பு மறுக்கூட்டலுக்கு காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டது போல 10ம் வகுப்பு மறுக்கூட்டலுக்கும் கால அவகாசத்தை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

English summary
The Director of Government Examinations has announced that the deadline for the 10th grade examination will be completed by the end of the day.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia