இந்த ஆண்டு புதிய பி.எட். கல்லூரிகளுக்கு அனுமதி ரத்து.. மத்திய அரசு அறிவிப்பு...!

Posted By:

சென்னை : பி.எட் கல்லூரிகள் புற்றீசல் போல் பெருகி வருவதால் இந்த வருடம் புதிய பி.எட் கல்லூரிகளுக்கு அனுமதிக் கொடுக்க முடியாது என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் பயிற்சியின் தரத்துக்கு முக்கியத்துவம் அளித்துத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பணம் கொடுத்தால் நாளை பட்டம் கொடுத்து விடுகிறார்கள். ஆசிரியர் பயிற்சியின் தரம் இதனால் குறைந்துவிடுகின்ற அபாயம் உள்ளது.

இந்த ஆண்டு புதிய பி.எட். கல்லூரிகளுக்கு அனுமதி ரத்து.. மத்திய அரசு அறிவிப்பு...!

அதனால் மேலும் புதிய பி.எட் கல்லூரிகளுக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே செயல்பட்டு வரும் பி.எட் கல்லூரிகள் தர ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். பி.எட். மற்றும் டி.டி.எட். படிப்புகளில் செய்முறை பயிற்சியின் தரம் உயர்த்தப்படும். அரசு பள்ளிகளில் அங்குள்ள ஆசிரியர்கள் மேற் பார்வையில் செய்முறை பயிற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த பயிற்சி குறித்தும் அங்குள்ள மாணவர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். எனவும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

English summary
Union HRD Minister Prakash Javadekar said the new B.Ed colleges can not be allowed this year.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia