சிடெட் தேர்வு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே.... சிபிஎஸ்இ அதிரடி அறிவிப்பு!

Posted By:

சென்னை : ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடெட்) இனி ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

சிடெட் என்பது மத்திய ஆசிரியர் நியமன தகுதிக்கான தேர்வாகும். இந்தத் தேர்வு ஆண்டுக்கு இருமுறை சிபிஎஸ்இ நிறுவனத்தால் நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால் சிடெட் தேர்வு இனி ஆண்டுக்கு ஒரு முறைதான் நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

சிடெட் தேர்வு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே.... சிபிஎஸ்இ அதிரடி அறிவிப்பு!

சிபிஎஸ்இ ஜெஇஇ மெயின் தேர்வு, நீட் தேர்வு, நெட் தேர்வு, மருத்துவப் படிப்புக்களுக்கான தேர்வு, என்று பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. இதனால் சிபிஎஸ்இ நிறுவனம் அதிக பணிச்சுமை ஏற்பட்டிருப்பதாக அறிவித்துள்ளது,

சிபிஎஸ்இ பல்வேறு நுழைவுத் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதனால் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வான சிடெட் தேர்வை இனி ஆண்டுக்கு இருமுறை நடத்த முடியாது என மத்திய மேம்பாட்டு அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது.

இனிவரும் ஆண்டுகளில் சிடெட் தேர்வு ஆண்டுக்கு இரு முறை நடைபெறாது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சிடெட் தேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

இதைப்போல் நெட் தேர்வினையும் சிபிஎஸ்இ பணிச்சுமை அதிகமாக உள்ளதால் நடத்தமுடியாது என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சககம் இந்த வருடம் நெட் தேர்வு ஜூலை மாதம் நடைபெறும் என தெரிவித்துள்ளது. அதை சிபிஎஸ்இ நிறுவனமே நடத்தும் எனவும் தெரிவித்துள்ளது.

என்.டி.எஸ் என்னும் தேசிய தேர்வு பணிமையத்தை மத்திய அரசு அமைக்கிற வரையில் இந்த ஏற்பாடு தொடரும் எனவும் பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.

English summary
The HRD department has said that the CTET exam will be conducted once a year. because the CBSE has a lot of workload.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia