சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!

Posted By:

சென்னை : மத்திய கல்வி வாரியமான சிபிஎஸ்இயின் 10ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 9ந் தேதி தொடங்கி ஏப்ரல் 10ந் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 20 லட்சம் மாணவ மாணவிகள் எழுதினார்கள்.

மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சிபிஎஸ்இ 10ம் வகுப்புத் தேர்வு முடிவு நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கருணை மதிப்பெண் சர்ச்சைக்கு பின் 12ம் வகுப்பு தேர்வு முடிவு மே 28 அன்று வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து நாளை 10ம் வகுப்பு தேர்வி முடிவுகள் வெளியாக இருக்கிறது.

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!

19.8 லட்சம் மாணவ மாணவிகள் 10ம் வகுப்பு தேர்வினை எழுதியுள்ளார்கள். நாளை தேர்வு முடிவு என்பதால் மாணவ மாணவிகளே கொஞ்சம் டென்சா இருக்கா? நோ டென்சன் ரிலாக்சா இருங்கள். உள்ளதை உள்ளபடி தைரியமாக ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். தைரியமாக தேர்வு முடிவை எதிர்கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.

தேர்வு முடிவுகளை www.results.nic.in, www.cbseresults.nic.in, www.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

English summary
The Central Board of Secondary Education (CBSE), the 10 th Class Exam, was held from 9th March to 10th April. The results will be announced tomorrow.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia