சென்னை : மத்திய கல்வி வாரியமான சிபிஎஸ்இயின் 10ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 9ந் தேதி தொடங்கி ஏப்ரல் 10ந் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 16 ஆயிரம் பள்ளிகளைச் சார்ந்த 16 லட்சத்து 67 ஆயிரம் மாணவ மாணவிகள் எழுதினார்கள்.
மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சிபிஎஸ்இ 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் சிபிஎஸ்இ இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டது. கருணை மதிப்பெண் சர்ச்சைக்கு பின் 12ம் வகுப்பு தேர்வு முடிவு மே 28 அன்று வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று ஜூன் 3ந் தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியது.

16 லட்சத்து 67 ஆயிரத்து 573 மாணவ மாணவிகள் 10ம் வகுப்பு தேர்வினை எழுதினார்கள். அதற்னான தேர்வு முடிவுகள் இன்று சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
தேர்வு முடிவுகளை மாணவ மாணவிகள் கீழே உள்ள இணையதளங்களில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம். தங்களது தேர்வு வரிசை எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












