நீட் தேர்வுடன் பிளஸ்-2 மதிப்பெண்ணை கணக்கிட கோரி... வழக்கு..!

Posted By:

சென்னை : நீட் தேர்வு மதிப்பெண்ணுடன் பிளஸ்-2 தேர்வு மதிப்பெண்ணை கணக்கிட கோரி வழக்கு ஒன்று ஐகோர்ட்டில் தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக மருத்துவ கவுன்சிலுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நாளை (ஞாயிற்றுக் கிழமை) நாடு முழுவதும் நடைபெறுகிறது. இந்த தேர்வில் பெறப்படும் மதிப்பெண்ணுடன், பிளஸ்-2 மதிப்பெண்களையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று ஐகோர்ட்டில் டாக்டர் ராமாச்சந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் என். கிருபாகரன், வி. பார்த்திபன் ஆகியோர் நேற்று விசாரித்தனர். பின்னர், மனுதாரர் எழுப்பியுள்ள இந்த விவகாரம், மிகப்பெரிய பிரச்சனையாகும். இதனால் இந்த வழக்கிற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுடன் பிளஸ்-2 மதிப்பெண்ணை கணக்கிட கோரி... வழக்கு..!

இந்த வழக்கிற்கு பதில் மனுவை இன்னும் 3 வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைக்கிறோம் என்று (என். கிருபாகரன், வி. பார்த்திபன்) நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ஜூன் மாதம் வரும் தீர்ப்பு மாணவ மாணவியர்களுக்கு சாதமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 12ம் தேதி வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு நாளை நாடு முழுவதும் நடைபெற உள்ளது.

நாளை நடைபெறும் நீட் தேர்வினை தமிழகத்தில் மட்டும் மொத்தம் 88 ஆயிரம் பேர் எழுத உள்ளனர். நாடுமுழுவதும் கிட்டத்தட்ட 11 லட்சம் பேர் எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவ மாணவியர்கள் 9.30 மணிக்கு முன்னதாகவே தேர்வு அறைக்கு செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக வருபவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

English summary
A case was filed inthe Court seeking tocalculate the plus2 testscore with the NEETscore. Thenotice has been sent to the Medical Council regarding the case

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia