சிறைக் கைதிகளின் சிறப்பான சாதனை.... 10ம் வகுப்பு தேர்வில் 203 கைதிகள் தேர்ச்சி...

10ம் வகுப்பு தேர்வில் 9 பெண் கைதிகள் உள்பட 203 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் ஒரு சிலர் 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து சாதனைப்படைத்துள்ளனர்.

சென்னை : சென்னையை அடுத்த புழல், கோவை, பாளையங்கோட்டை, வேலூர் மற்றும் திருச்சி ஆகிய சிறைகளில் உள்ள 5 தேர்வு மையங்களில் 10ம் வகுப்பு தேர்வு நடைபெற்றது. இதில் 9 பெண் கைதிகள் உள்பட 228 பேர் தேர்வு எழுதினர். அதில் 203 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 9 பெண் கைதிகள் உள்பட 203 பேர் தேர்ச்சி அடைந்தனர். பாளையங்கோட்டை சிறையை சேர்ந்த கைதி அபு பக்கர் சித்திக் அலி 422 மதிப்பெண்களும், புழல் சிறை கைதி நீலகண்டன் 415 மதிப்பெண்களும், திருச்சி சிறை கைதி செந்தில் முருகன் 411 மதிப்பெண்களும், புழல் சிறை கைதி ராஜபாண்டியன் 401 மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சிறைக் கைதிகளின் சிறப்பான சாதனை.... 10ம் வகுப்பு தேர்வில் 203 கைதிகள் தேர்ச்சி...

தேர்வில் தேர்ச்சி பெற்ற 203 கைதிகள், அவர்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்கள், புழல் சிறை ஆசிரியர் ராஜேந்திரன் ஆகியோரை சிறை அதிகாரிகள் பாராட்டினர்.

படிப்பிற்கு வயது இடம் ஆகியவைகள் எல்லாம் ஒரு பொருட்ட அல்ல என சிறைவாசிகள் நிருபித்துள்ளனர். 9 பெண் கைதிகள் உள்பட 203 பேர் சிறையில் இருந்து கொண்டே பத்தாம் வகுப்பு தேர்வை சிறப்பாக எழுதி தேர்ச்சி பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.

படிப்பதற்கு ஆர்வமும் படிப்பில் அக்கறையும் இருந்தால் போதும் எந்த சூழ்நிலையிலும் படிக்கலாம் என்பதற்கு இவர்கள் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார்கள். தவறு செய்வது மனித இயல்பு தவறு செய்வது தவறல்ல அதை உணர்ந்து திருந்தாமல் இருப்பதுதான் தவறு. தங்களுடைய தவறுக்கான தண்டனைக் காலத்திலும் படிக்க வேண்டும் தேர்ச்சி பெற வேண்டும் என்கிற முனைப்போடு சாதித்தவர்களுக்கு மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The 10th Std Examination was held in 5 exam centers in Chennai, Palaiyankottai, Vellore and Trichy. Of these, 203 have been enrolled, including 9 female prisoners.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X