அரசு கல்லூரி மற்றும் பல்கலைகளில் புதிய பணி நியமனத்திற்கு தடை..!

Posted By:

சென்னை : பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு கல்லுாரிகளில் உள்ள காலியிடங்களில், புதியவர்களை நியமிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள பணியிடங்களில் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அண்ணாமலை பல்கலைக் கழகம் தனியாரிடமிருந்து அரிசின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், அதிக நஷ்டம் ஏற்பட்டதால், அதன் நிர்வாகம் தனியாரிடமிருந்து, அரசின் நேரடி கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளில் பணியாற்றும் ஊழியர்கள், ஆசிரியர்கள் சம்பளத்திற்காக, மாதம், 50 கோடி ரூபாய் வரை அரசின் நிதி செலவிடப்படுகிறது.

அரசு கல்லூரி மற்றும் பல்கலைகளில் புதிய பணி நியமனத்திற்கு தடை..!

இந்த பல்கலைக்கழகத்தில் 5000க்கும் மேற்பட்டவர்கள் பணியின்றி சம்பளம் வாங்குவதாக உயர்கல்வித்துறை கண்டறிந்துள்ளது. கண்டறியப்பட்டவர்களில் முதலில் 369 பேர் அரசு கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அதன் பின்பு 547 பேராசிரியர்களும், 1,500 ஊழியர்களும் மாற்றப்பட உள்ளனர். மீதமுள்ள, 3,000 பேரையும், மாற்ற பட்டியல் தயாராகி வருகிறது. இவர்களை, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மற்ற பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில் நியமிக்க, உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதனால், பல்கலைகள் மற்றும் அரசு கல்லுாரிகளில் காலியிடங்களை நிரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. 'காலியிடங்களை நிரப்ப, அறிவிப்பு வெளியிட்டிருந்தால், அதை திரும்பப்பெற வேண்டும். மீறி, புதிதாக ஆட்கள் நியமிக்கப்பட்டால், அந்த பல்கலைக்கழகத்திற்கான நிதி மற்றும் மானிய தொகை கிடைக்காது என பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு, உயர் கல்வித்துறை எச்சரித்துள்ளது.

அண்ணாபல்கலைக் கழகம் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதின் விளைவாகத்தான் இந்த அதிரடி நடவடிக்கைகளை உயர்கல்வித்துறை எடுத்துள்ளது. அண்ணாப்பல்கலையில் உள்ள 5000 பேரும் பணியில் அமர்த்தப்பட்ட பின்னர்தான் புதிய பணி நியமன அறிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Annamalai University Professors will be appointed at the workshops of Government College and Universities.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia