10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு நாளை வெளியாகிறது.. இந்த இணையதளத்தில போய் ரிசல்ட் பாருங்க...!

Posted By:

சென்னை : 10லட்சத்து 38 ஆயிரம் பேர் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவு நாளை வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தபடி வெளியாகிறது. மாணவ மாணவிகளுக்கு மதிப்பெண் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பப்பட உள்ளது.

மார்ச் 8ந் தேதி முதல் 30ந் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. இந்த வருடம் முதல் பொதுத் தேர்வு முடிவு வெளியிடுவதில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன் படி மாணவர்களின் ரேங்க் பட்டியல் மற்றும் மாவட்ட வாரியான மதிப்பெண் பட்டியல் ஆகியவைகள் வெளியிடப்படுவதில்லை. மாணவ மாணவியர்களுக்கு கிரேடு முறை அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.எம்.எஸ் மூலம் மதிப்பெண்

தேர்வு முடிவு வெளியாகிய உடனே மாணவ மாணவியர்களின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் அவர்களின் மதிப்பெண்கள் அனுப்பி வைக்கப்படும். மேலும் ஏற்கனவே மாணவ மாணவியர்களிடம் இருந்து செல்போன் எண்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அந்த நம்பருக்கு தகவல்கள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும்.

இணையதள முகவரி

நாளை காலை வெளியாகும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவினை தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி வருடம் மற்றும் மாதத்தினை பதிவு செய்து மதிப்பெண்களை கீழே உள்ள இணையதள முகவரியில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

www.tnresults.nic.in,
www.dge1.tn.nic.in,
www.dge2.tn.nic.in

 

மதிப்பெண் சான்றிதழ்

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் அலவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். 25.05.2017ந் தேதிமுதல் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சிறப்புப் பொதுத் தேர்வு

19.05.2017ந் தேதி முதல் 22.05.2017ந் தேதி மாலை 5.45 வரை பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தங்கள் தேர்வு மையம் மூலமாகவும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும், தேர்வுக்கு வருகை புரிய இயலாதவர்களுக்கும் ஜூன் மாத இறுதியில் சிறப்புப் பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
School Education Minister KA Sengottaiyan announced that the 10th standard public examination will be announced on May 19.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia