10ம் வகுப்பு தேர்வில் அரசுப் பள்ளிகளில் 91.59 சதவீதம் பேர் தேர்ச்சி...!

Posted By:

சென்னை : 10ம் வகுப்புத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் 91.59 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தனியார் பள்ளிகளை ஒப்பிடும் போது அரசு பள்ளிகளின் தேர்ச்சி சற்று குறைவாகக் காணப்படுகிறது.

அரசுப் பள்ளிகளில் 88.88 சதவீதம் மாணவிகளும், 93,97 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 4 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தேர்வி எழுதினார்கள் அதில் 3 லட்சத்து 69 ஆயிரத்து 572 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

  10ம் வகுப்பு தேர்வில் அரசுப் பள்ளிகளில்  91.59 சதவீதம் பேர் தேர்ச்சி...!

தமிழகத்தில் மொத்தம் 94.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 96.2 சதவீதம் மாணவிகள் மற்றும் 92.5 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த வருடத்தை 0.8 சதவீதம் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த வருடத்தை விட 15,506 பேர் அதிகமாக முழு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் யாரும் முழு மதிப்பெண் பெறவில்லை. சென்னை மாவட்டம் 22வது இடத்தை தேர்ச்சி விகிதத்தில் பெற்றுள்ளது.

10ம் வகுப்பு தேர்வில் தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் 91.59% மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநகராட்சி பள்ளிகளில் 93.52 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

புதுச் சேரியில் 93.67% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 95.9 சதவீதம் மாணவிகளும், 91.5 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஆதி திராவிடர் பள்ளிகளில் 86.77% பேர், ஆங்கிலே இந்தியன் பள்ளிகளில் 97.9% பேர், இராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 87.13% பேர், கார்ப்பரேசன் பள்ளிகளில் 93.52% பேர், வன இலாக்கா துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 93.77% பேர், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் 94.26% பேர், அறநிலைத் துறை சார்பாக நடத்தப்படும் பள்ளிகளில் 92.76% பேர், சீர் மரபினர் பள்ளிகளில் 94.70% பேர், முனிசிபாலிட்டி பள்ளிகளில் 91.74% பேர், ஓரியண்டல் பள்ளிகளில் 95.53% பேர், அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 95.62% பேர், ரயில்வே பள்ளிகளில் 95% பேர், சுயநிதி மெட்ரிக் பள்ளிகளில் 98.54% பேர், சமூகநலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 86.26% பேர் மற்றும் எஸ்சி எஸ்டி பள்ளிகளில் 79.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திருநங்கை ஒருவரும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

English summary
91.59 percent of students in Tamilnadu examined in 10th public examinations in government schools.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia