10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்.. நாளை மறுநாள் வெளியீடு!

Posted By:

சென்னை : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு மே 19ந் தேதி வெளியிடப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி நாளை மறுநாள் தேர்வு முடிவு வெளியிடப்படும்.

12ம் வகுப்புத் தேர்வு முடிவைப் போலவே 10ம் வகுப்புத் தேர்வு முடிவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்.. நாளை மறுநாள் வெளியீடு!

தேர்வு முடிவினை கீழ்க்கண்ட இணையதள முகவரிகளில் சென்றுப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

www.tnresults.nic.in,
www.dge1.tn.nic.in,
www.dge2.tn.nic.in

தேர்வு முடிவுகள் வெளியான 10 நிமிடங்களில் மாணவர்களுக்கு தகவல்கள் கைப்பேசி மூலம் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இதற்காக ஏற்கனவே மாணவர்களிடமிருந்து கைப்பேசி எண்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவிலும் முதல் மூன்று ரேங்க் பட்டியல் வெளியிடப்படாது மற்றும் மாவட்ட வாரியாக மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரேடு முறையே இதிலும் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிப்பவர்கள் மே 19 முதல் 22ந் தேதி மாலை 5.45 வரை விண்ணப்பிக்கலாம். மே 25ந் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். ஜூன் மாத இறுதியில் சிறப்புத் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
School Education Minister KA Sengottaiyan announced that the 10th standard public examination will be announced on May 19.
Please Wait while comments are loading...