மியான்மரிலும், தென் ஆப்பிரிக்காவிலும் செயல்பட்டு வரும் தமிழ்ப் பல்கலைக் கழகம் மூலம் தமிழ் பயிற்றுவிக்கப்பட்ட உள்ளது என தஞ்சைப் பல்கலைக் கழக துணை வேந்தர் கோ.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-
தமிழ் பழமைவாய்ந்த உலக மொழியாகும். இதற்குக் காரணம் தமிழர்கள் இல்லாத கண்டமே இல்லை. அந்தத் தமிழர்களுக்கு அவர்களுடைய அடையாளம் என்பது ஒரு சிக்கலாக உள்ளது. அந்த அடையாளத்திற்காக ஏங்குபவர்களுக்குத் தகுந்த அடையாளத்தை அளிப்பது தமிழ்ப் பல்கலைக் கழகம் தான். இப்பணியைச் செய்ய தமிழக அரசு நடப்பாண்டில் ரூ.27 லட்சம் வழங்கியுள்ளது.
மியான்மரிலும், தென் ஆப்பிரிக்காவிலும் உள்ள தமிழர்களுக்கு தமிழைப் பயிற்றுவிப்பதற்காகவும், தமிழ்ப் பண்பாட்டு உணர்வை ஓட்டுவதற்காகவும் 2019 மார்ச் மாதத்திற்குள் தமிழ்ப் பல்கலைக் கழக ஆசிரியர்கள் அங்கே சென்று முறையாகத் தமிழைப் பயிற்றுவித்து பண்பாட்டு உணர்வுகளை எடுத்துரைக்க உள்ளனர் என்றார்.


Click it and Unblock the Notifications












