தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பி.எட் படிப்பில் சேர ஆசையா?

Posted By:

சென்னை : தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகம் தொலைநிலைக் கல்வி இயக்கமாக செயல்பட்டு வருகிறது. இதில் பி.எட் படிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புது டெல்லி தொலைநிலைக்கல்விக் குழும (டிஇபி மற்றும் என்சிடிஇ) அங்கீகாரம் பெற்று செயல்படும் வாகையூர், திருச்சி சாலை, தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் இரண்டு ஆண்டு பி.எட் படிப்பிற்காக மாணவர் சேர்கை ஆரம்பமாகியுள்ளது.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பி.எட் படிப்பில் சேர ஆசையா?

தமிழ்ப் பல்கலைக்கழகம் தொலைநிலைக் கல்வி இயக்கமாக செயல்பட்டு வருகிறது. இதில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இங்கு பி.எட் படிப்பதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன,

கற்பித்தல் அனுபவத்துடன் ஆசிரியர் பயிற்சி பெற்று அரசு அல்லது அரசு ஒப்புதல் பெற்ற பள்ளிகளில் தற்போது ஆசிரியர்களாகப் பணியாற்றுபவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பி.எட் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்தினைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் தொலை நிலையக் கல்வி இயக்கத்தில் நேரடியாக ரூ750/- ஐ செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது அஞ்சல் வழியில் பெறுவதற்கு ரூ. 800/- ஐ செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் இணையதளத்தின் மூலமும் பெற்றுக் கொள்ளலாம்.

www.tamiluniversity.ac.in என்ற இணையதள முகவரிக்குச் சென்று விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொண்டு அத்துடன் the director, dee என்ற பெயரில் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் கேட்பு வரைவோலை (டிடி) ரூ. 750/- க்கு பெற்று இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரி

இயக்குநர்,
தொலைநிலைக்கல்வி இயக்கம்,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர் - 10.
என்ற முகவரிக்கு விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அனுப்பவும் .

விண்ணப்பங்கள் நிறைவு செய்து அனுப்புவதற்கு கடைசி தேதி 6 ஜூன் 2017 ஆகும். மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

கல்வித் தகுதி மற்றும் இதர விபரங்களுக்கு www.tamiluniversity.ac.in என்ற இணையதள முகவரிக்கு சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

English summary
Thanjavur Tamil University Director Dr.N.Baskaran has told that B.ed Application form is welcom. Application form dowload at www.tamiluniversity.ac.in.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia