பிளஸ் 2வில் மார்க் கம்மியா எடுத்துட்டீங்களா? நோ டென்சன்.. வேலை வாய்ப்பை அள்ளித் தரும் படிப்புகள்

Posted By:

சென்னை : பிளஸ் 2வில் மார்க் கம்மியா எடுத்துட்டோமோன்னு பீல் பண்ண வேண்டாம். வேலை வாய்ப்புகளை அள்ளித் தரும் ஏராளமான படிப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. 12ம் வகுப்பிற்குப் பின் நமக்கு தெரிந்தது எல்லாம் மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் படிப்புகள் மட்டும்தான்.

ஆனால் அதில் எத்தனையோ பாடப்பிரிவுகள் புதுபுதிதாக வந்துள்ளன. வேலை வாய்ப்பை அள்ளித் தரும் நல்ல படிப்புகள் நிறைய இருக்கிறது. 12ம் வகுப்பு மார்க் மட்டும் நம்ம வாழ்க்கையை தீர்மானிக்க முடியாது. நாம் தான் நம் வாழ்க்கையை தீர்மானிக்க வேண்டும். மார்க் கம்மியா எடுத்துவிட்டோமே என்று கவலைப்படுவதை விட்டு விட்டு மேற்படிப்பை தொடர்வதைப் பற்றி சிந்தியுங்கள்.

மேற்படிப்பு சம்பந்தமாக பல பயனுள்ள தகவல்களை ஒன் இந்தியா நாள்தோறும் தொகுத்து வழங்கி வருகிறது. அதை தவறாமல் படித்து தெரிந்து கொள்ளுங்கள். இன்றைக்கு நாம் பார்க்க இருப்பது நெசவுத்துறையின் வளர்ச்சிக்கு உதவும் டெக்ஸ்டைல் என்ஜீனியரிங் படிப்பாகும்.

டெக்ஸ்டைல் என்ஜீனியரிங்

நெசவுத் துறை என்பது இந்தியாவின் மிக பழமையான மற்றும் பாரம்பரியமான தொழில் துறையாகும். இந்த நெசவு துறை சார்ந்த தொழில் நுட்ப படிப்பே டெக்ஸ்டைல் தொழில்நுட்பமாக வழங்கப்படுகிறது. டெக்ஸ்டைல் என்ஜீனியரிங் என்பதில் தத்துவம் மற்றும் ரசாயன ரீதியான அடிப்படைகள் போன்றவை அறிவியல் மற்றும் பொறியியல் கூறுகளுடன் கற்பிக்கப்படுகிறது. இவை அனைத்தும் நெசவு துறையில் உற்பத்தி மற்றும் வடிவமைப்பு போன்றவைகளில் உட்புகுத்தப்பட்டு அத்துறையை மேம்படுத்த உதவுகின்றன. டெக்ஸ்டைல் என்ஜீனியரிங் என்பது பலதரப்பட்ட துணிகளான பருத்தி மற்றும் சிந்தெடிக் துணிகள் தயாரிப்பு சார்ந்தவையாக உள்ளது.

எப்போதும் இருக்கிறது வேலை வாய்ப்பு

புதிய தொழில் நுட்பங்கள் திட்டமிடல் மற்றும் வளர்ச்சி, புதிய உபகரணங்கள் தயாரிப்பு என இந்த பொறியியல் பிரிவு விரிந்த அளவில் உள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 30 மில்லியன் மக்கள் நெசவு துறையில் அதிநவீன உபகரணம் மற்றும் இயந்திரங்கள் மூலமாக அதிக உற்பத்தி, புதிய வடிவமைப்பு, நெசவு பொருட்கள் தயாரிப்பு என அனைத்திலும் புதிய உத்வேகத்துடன் செயல்படுவது அவசியம். நெசவு துறையை அறிவியல் ரீதியாக முன்னேற்றமடைய செய்ய பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. புதிய உத்வேகமான நெசவு பொறியியல் மூலம் வடிவமைப்பு உத்திகள், உற்பத்தி, விநியோகம் மற்றும் ஆடைகள் விற்பனை போன்றவை கையாளப்படுகிறது. பல தரப்பட் துணிகள், நெசவுகள் மற்றும் தறிகள் போன்றவற்றை உற்பத்தி செய்தல் மற்றும் வடிவமைத்தலுக்கு நெசவு பொறியியல் உதவி புரிகிறது. நெசவு துறை என்றென்றும் தனக்கென சிறப்பான இடம் பிடித்துள்ள துறை என்பதுடன், அதில் என்றும் தொய்வின்றி பணிகள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

நெசவு பொறியியல் கற்பிக்கப்படுபவை

டெக்ஸ்டைல் என்ஜீனியரிங் படிப்பில் ஆடை உற்பத்தி, வடிவமைப்பில் சதாரண மனிதனுக்கு ஏற்படும் சந்தேகங்களை அகற்றி நுணுக்கங்கள் கற்பிக்கப்படுகிறது. அதாவத நெசவு உபகரணம் மற்றும் உற்பத்திக்கு என தனிப்பட்ட பொறியியல் தத்துவங்களை, அடிப்படைகளை இக்கல்வியின் வாயிலாக பெற முடிகிறது. மேலும் பொறியியலின் பிற பிரிவுகளான இன்ஸ்ட்டுமென்டேஷன், கணிணித்துவம் எலக்டரானிக்ஸ், ஸ்ட்ரச்சுரல், மெக்கானிக்கல் மற்றும் ரசாயன பொறியியல் போன்றவைகளும் இப்பாடபிரிவின் மூலமாக கற்பிக்கப்படுகிறது.

என்னென்ன வேலை வாய்ப்பு

நெய்யபடாத மூலப் பொருட்கள் தயாரிப்பு, வியாபரத்திற்கு தேவையான ஆலோசனைகள் வழங்குவது, இயற்கையான நூலிழை மற்றும் செயற்கை நூலிழைகளுக்கான தரச்சான்று தருவது, பிரிண்டிங், டையிங் மற்றும் தயாரிக்கப்பட்ட ஆடைகளை கண்காணிப்பது, மூலப்பொருட்களின் தேவையை பூர்த்தி செய்தல், ஒவ்வொரு கட்டத்திலும் ஆடைகளின் தரத்தை சோதித்து அணிவது போன்ற பணிகளை மேற்கொள்பவராக திகழ்கிறார். நெசவு சார்ந்த தொழில் நிறுவனங்களில் புராசஸ், என்ஜீனியரிங், ஆப்ரேஷன் டிரெயினி, டெக்னிக்கல் சேல்ஸ்மேன், டெவலப்மெண்ட் என்ஜீனியர், தர நிர்ணய மேற்பார்வையாளர், மெடிக்கல் டெக்ஸ்டைல் என்ஜீனியர் போன்ற பணிப்பதவிகளை பெறுகின்றனர்.

இந்தியாவின் சுவாசம் நெசவு துறை

புதிய துறைகள் பல வளர்ச்சி பெற்று வருகின்றன. இவற்றிலும் டெக்ஸ்டைல் என்ஜீனியருக்கு நல்ல பணி வாய்ப்புகள் உள்ளன. மேலும் இப்பிரிவில் பட்டபடிப்புகளை முடித்த பிறகு பிற சிறப்பு பிரிவுகளான நெசவு துறையில் கணிணி பயன்பாடு, டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ், பைபர் சயின்ஸ் தொழில்நுட்பம், டெக்ஸ்டைல் கெமிக்கல் தொழில்நுட்பம் போன்றவற்றில் இணைந்து சிறப்பான மேம்பட்ட அறிவை பெறலாம். இதன் மூலம் மேம்பட்ட வேலை வாய்ப்பையும் பெற முடியும். இந்தியாவின் சுவாசமாக விளங்கும் நெசவு துறையின் வளர்ச்சிக்கும் டெக்ஸடைல் என்ஜீனியரிங் பெரும் அளவு பங்கு வகிக்கிறது. டெக்ஸ்டைல் என்ஜீனியரிங் படிப்பில் ஆடை உற்பத்தி, வடிவமைப்பில் சாதாரண மனிதனுக்கு ஏற்படும் சந்தேகங்களை அகற்றி நுணுக்கங்கள் கற்பிக்கப்படுகிறது. அதாவது நெசவு உபகரணம் மற்றும் உற்பத்திக்கு என தனிப்பட்ட பொறியியல் தத்துவங்களை, அடிப்படைகளை இக்கல்வியின் வாயிலாக பெற முடிகிறது.

English summary
Above mentioned article about textile engineering course details and job opportunities.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia