டிஇடி எழுதுவோருக்கு இலவச பயிற்சி - பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு

Posted By: Jayanthi

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத உள்ள பழங்குடியின பட்டதாரிகளுக்கு 15 மாவட்டங்களில் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் சேர விரும்பும் பட்டதாரிகள் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

டிஇடி எழுதுவோருக்கு இலவச பயிற்சி - பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு

தமிழகத்தில் உள்ள பழங்குடியின அல்லது மலைசாதி பிரிவைச் சேர்ந்த பி.எட் முடித்த பட்டதாரிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வசதியாக 40 நாட்களுக்கு பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான பயிற்சியை மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் நடத்த உள்ளது. இந்த பயிற்சி 15 மாவட்டங்களில் செயல்படும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும். இந்த பயிற்சியில் சேர விரும்பும் பழங்குடியின் பட்டதாரிகள் தங்கள் பகுதியில் செயல்படும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 30ம் தேதிக்குள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, ஆகிய மாவட்டங்களில் இந்த பயிற்சி நடக்கிறது.

English summary
The Education Department has arranged for a free training programme for tribal students who are writing Teacher Eligibility Test this year.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia