2011ம் ஆண்டுக்கு முன்பே பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மகிழ்ச்சி - தகுதித் தேர்வில் விலக்கு

Posted By:

சென்னை : 2011-ம் ஆண்டு நவம்பருக்கு முன்பிலிருந்து அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து இடைக்கால உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்றம்.

15.11.2011-ம் ஆண்டு அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அந்த அரசாணையில் அனைத்து ஆசிரியர்களுக்கும் தகுதி தேர்வு (டெட்) எழுத ஆணை பிறப்பிக்கப்பட்டது.

2011ம் ஆண்டுக்கு முன்பே பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மகிழ்ச்சி -  தகுதித் தேர்வில் விலக்கு

பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து 4 இடைநிலை ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விராரணைக்கு வந்தது. விசாரணையில் நீதிபதி ராஜா தகுதி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

விசாரணையில் முடிவில், 2011-ஆம் ஆண்டுக்கும் முன்பிலிருந்து அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து இடைக்கால உத்தரவிடப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களை ஆசிரியர் தகுதி தேர்வை எழுத கட்டாயப்படுத்தக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த இடைக்கால உத்தரவினால் 2011ம் ஆண்டிற்கு முன்பே வேலையில் சேர்ந்து பணியாற்றி வரும் அனைத்து ஆசிரியர்களும் மகிழ்ச்சியில் மிதக்கின்றனர்.

வரும் 29, 30 ஆகிய தேதிகளில் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு நடக்க உள்ளது அதற்கான ஹால் டிக்கெட் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

English summary
Madras high court on Tuesday said TET exmption for In 2011 belong to the earlier work. need not appear for the mandatory Teachers Eligibility Test (TET).

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia