ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ரெடியா.. இந்தாங்க டிப்ஸ்!

Posted By:

சென்னை : ஆசிரியர் தகுதித் தேர்விற்கு மார்ச் 6ம் தேதி முதல் மார்ச் 22ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆசிரியர் தகுதித் தேர்விற்கான வாய்ப்பு எப்போது வரும் எனக் காத்துக் கொண்டிருந்நவர்களுக்கு இந்த வருடம் ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ரெடியா.. இந்தாங்க  டிப்ஸ்!

டிஇடி தேர்விற்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு தேவையான டிப்ஸ்

1, டிஇடி தேர்விற்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் முதலில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடப்புத்தகத்தினை நன்கு படித்துக் கொள்ள வேண்டும். அதிலுள்ள அனைத்துப் பாடங்களையும் தெளிவாக முதலில் படித்துக் கொள்ள வேண்டும்.

2, முதல் தாள் தேர்வு எழுதுபவர்கள் டிஇடி டிப்ளமோ பகுதியில் உள்ளப் பாடங்களை நன்றாகப் படிக்க வேண்டும்.

3, இரண்டாம் தாள் தேர்வு எழுதுபவர்கள் பி.எட் பகுதியில் உள்ளப் பாடங்களை நன்றாகப் படிக்க வேண்டும்.

4, சாகித்ய அகாதெமி, மத்திய மாநில அரசு சார்பில் பெற்ற விருதுகள், பட்டங்கள், தபால் தலை வெளியிட்ட ஆண்டுகள், நூற்றாண்டு விழாப் பற்றிய தகவல்களை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

5, அடிப்படை உரிமைகள், கடமைகள், தேசிய சின்னங்கள், அரசியல் முறை, பாராளுமன்றம், சட்ட மன்றம் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் திட்டங்கள் ஆகியவற்றைப் பற்றியும் படித்துக் கொள்ளுங்கள்.

6, மாநிலத்தில் நடக்கும் நிகழ்வுகளை தினமும் செய்தித்தாள் வாசிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆதலால் போடித் தேர்விற்கு தயாராகுபவர்கள் கட்டாயம் செய்தித் தாள் வாசித்து அதிலுள்ள செய்திகளை படித்து குறிப்பேடுத்து வைத்துக் கொள்ளவும்.

7, புவியியல் பாடம் படிக்கும் போது அட்லஸ் மற்றும் மேப் போன்ற உபகரணங்களைப் பயன்படுத்தி படிக்கும் போது அது உங்களுக்கு மறக்காது. மேலும் வரலாறு பகுதியினைப் படிக்கும் போது அதனை ஒரு கதைப் போல நினைத்து பல்வேறு அரசர்கள் மற்றும் போர்களைக் குறித்துப் படியுங்கள்.

8. தமிழ் மற்றும் ஆங்கிலப் பகுதியில் இலக்கணப் பகுதியினை நன்றாகப் படித்துக் கொள்ளுங்கள். தமிழில் நூற்குறிப்பு, ஆசிரியர் குறிப்பு, சிறப்பு பெயர்கள் மற்றும் ஐந்திணைகள் போன்றவற்றைப் படித்துக் கொள்ளுங்கள்.

9, கணிதப்பாடத்திற்கு பள்ளிப் பாடபுத்தகங்களில் உள்ள மீ.சி.ம, மீ.பொ.வா. பின்னங்கள், கண மூலம், வர்க்க மூலம், மெட்ரிக் அளவைகள், விகிதம், வாழ்வியல் கணிதம். வட்டி கணக்குகள், முகடு, வீச்சு, பரப்பளவு, வடிவியல், சதவீதம் மற்றும் நாட்காட்டி கடிகாரம் போன்றவைகள் சார்ந்த கணக்குகளை நன்றாக செய்துப் பார்த்தாலே பேதுமானதாக இருக்கும்.

10, மாதிரி வினாத்தாள்களை தினமும் பயிற்சி செய்து பாருங்கள். தவறாமல் பயிற்சியை மேற்கொள்ளுங்கள். அது உங்கள் பலம் பலவீனங்களை அறிய உதவியாக இருக்கும். மேலும் உங்கள் நேர மேலாண்மையை அதிகரிக்கவும் உதவியாக இருக்கும்.

மேலே உள்ள டிப்ஸ்களை பயன்படுத்தி படியுங்கள். டிஇடி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுங்கள்.

English summary
Given the little tips very useful for you at the time of examination.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia