டெட் தேர்வு பிட் அடித்தால் கடுமையான நடவடிக்கை... கண்காணிப்பாளர்களுக்கும் கட்டுப்பாடு!

Posted By:

சென்னை : மூன்று ஆண்டுகளுக்கு பின் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதிக்கான டெட் தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

நாளைக்கு (29 ஏப்ரல், சனிக்கிழமை) இடைநிலைஆசிரியர் தகுதித் தேர்வும், ஞாயிற்றுக்கிழமை (30 ஏப்ரல்) பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வும் நடைபெற உள்ளது.

மாநிலம் முழுவதும் 1,861 மையங்களில் இந்த தேர்வு நடக்கிறது. இத்தேர்விற்கு 8.47 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் மேற்பார்வையில் டி.ஆர்.பி ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் காகர்லா உஷா தலைமையில் தேர்வுக்கான குழு அமைக்கப்பட்டு உள்ளது.

டெட் தேர்வு  பிட் அடித்தால்  கடுமையான நடவடிக்கை... கண்காணிப்பாளர்களுக்கும் கட்டுப்பாடு!

இந்த குழுவினருக்கு மண்டலம் மற்றும் மாவட்ட வாரியாக ஒதுக்கப்பட்டு உள்ளன. நாளை 29ம் தேதி, 598 மையங்களில் டெட் முதல் தாள் தேர்வு நடக்கிறது. மறுநாளான 30ம் தேதி 963 மையங்களில் இரண்டாம் தாள் தேர்வு நடைபெறுகிறது.

தேர்வுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் இடம் பெற்ற 3,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 18 ஆயிரம் ஆசிரியர்கள் கண்காணிப்பு பணியில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் காலை 7.30 மணிக்கே மையத்திற்கு வந்துவிட வேண்டும். ஆசிரியர்களின் முன்னிலையில் மட்டுமே முதன்மை கண்காணிப்பாளர்கள், வினாத்தாள் கட்டுகளை பிரிக்க வேண்டும். தேர்வு நடக்கும் வரை, வினாத்தாள்களை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வறையில் எந்த உணவுப் பொருட்களையும் அனுமதிக்கக் கூடாது. ஆசிரியர்களும் உணவு உட்கொள்வது நொறுக்கு தீனி சாப்பிடுவது கூடாது. நீரிழிவு நோய் பிரச்சனை இருந்தால் அதற்கான மருந்தை எடுத்துக் கொள்ளலாம்.

தேர்வு எழுதுவபவர்கள் காப்பியடிக்கவோ, முறைகேட்டில் ஈடுபடவோ, தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் உதவக் கூடாது. தேர்வில் காப்பியடித்தால், ஆள்மாறாட்டம் போன்ற விதி மீறல்களில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்வு எழுதுவோரை கண்காணிக்காமல் நாற்காலியில் உட்கார்ந்து, புத்தகம் படிப்பது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் டெட் தேர்விற்கு விதிக்கப்பட்டுள்ளது.

English summary
TRB has imposed draconian restrictions for teachers involved in surveillance work.Donot sit in the chairand study the book without examining the examineers

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia