டெல்லி டிஇஆர்ஐ பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிக்க வாய்ப்பு

Posted By:

சென்னை: டெல்லியிலுள்ள டிஇஆர்ஆர் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்பு பயில மாணவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

இன்பிராஸ்டிரக்ச்சர் அண்ட் பிஸினஸ் சஸ்டெயினபிளிட்டி பிரிவில் எம்பிஏ படிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேலை பார்த்துக் கொண்ட படிப்பவர்கள் மட்டுமே இந்த படிப்பை பயில முடியும். ஆனால் வேலை பார்த்த அனுபவம் இல்லாதவர்கள் இந்தப் படிப்பை பயில விரும்பினால் அவர்கள் கண்டிப்பாக இளநிலைப் பட்டத்தைப் பெற்றிருக்கவேண்டும்.

டெல்லி டிஇஆர்ஐ பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிக்க வாய்ப்பு

வேலை பார்க்கும் அனுபவம் உள்ளவர்கள், குறைந்தது 2 ஆண்டு வேலை பார்த்த அனுபவத்தைப் பெற்றிருத்தல் அவசியம். இளநிலைப் படிப்பை கடைசி ஆண்டு படிப்பவர்களும் இதைப் பயில முடியும்.

இந்தப் படிப்புக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.1,500 வசூலிக்கப்படும். கட்டணத்தை Registrar, TERI University' payable at New Delhi என்ற பெயரில் கேட்புக் காசோலையாக எடுக்கவேண்டும்.

CAT/GMAT/MAT/CMAT/XAT அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படும் மாணவர்கள் குழு விவாதத்துக்கு அனுப்பப்படுவர். அதன் பின்னர் நேர்முகத் தேர்வு இருக்கும்.

இந்த விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி அடுத்த ஆண்டு ஏப்ரல் 19 ஆகும். பல்கலைக்கழக கவுன்ட்டரில் விண்ணப்பங்களைக் கொடுக்க கடைசி தேதி ஏப்ரல் 22 ஆகும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் அறிவிக்கப்படும் தேதி மே 12. நேர்முகத் தேர்வு மே 23 முதல் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு www.teriuniversity.ac.in என்ற பல்கலைக்கழகத்தின் இணையதள முகவரியைக் காணலாம்.

English summary
TERI University has invited applications for admissions to Master of Business Administration (MBA) programme for the 2016 academic sessions. The MBA programme is being offers in Infrastructure and Business Sustainability. Eligibility: For MBA in Infrastructure: Candidates who do not have work experience should have a bachelor's degree with 50% marks or equivalent.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia