ஓவியம், தையல், இசை.... உள்ளிட்ட தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ரெடியா...?

Posted By:

சென்னை : ஓவியல். தையல். இசை போன்ற தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

ஓவியம் தையல் இசை போன்ற தொழில்நுட்பத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.

ஓவியம், தையல், இசை.... உள்ளிட்ட தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ரெடியா...?

விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள், தேர்வு நடைபெறும் மாதம் மற்றும் விண்ணப்பக்கட்டணம் பற்றிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள்

ஏப்ரல் 20ம் தேதி முதல் 26ம் தேதி வரை ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

தேர்வு நடைபெறும் மாதம்

ஓவியம், இந்திய இசை, நடனம், அச்சுக்கலை, விவசாயம், கைத்தறி நெசவு, தையல் ஆகிய தொழில்நுட்ப தேர்வுகளுக்கு மே மாதம் தேர்வு நடத்தப்படும் என அரசுத் தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

சேவை மையங்கள்

விண்ணப்பதாரர்கள் அரசு தேர்வுத் துறையின் சேவை மையங்களுக்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். மாவட்ட வாரியாக சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்தந்த மாவட்டங்களில் உள்ளவர்கள் அங்குள்ள சேவை மையத்திற்குச் சென்று ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என அரசு தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

தனியார் கணிணி மையங்கள்

விண்ணப்பதாரர்கள் தனியார் கணிணி மையங்கள் வழியாக ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யக்கூடாது. அரசு சேவைல மையங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மேலும் தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

விண்ணப்பக்கட்டணம்

நடனத்திற்கு (கீழ்நிலை) ரூ. 57 விண்ணப்பக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது, நடனம் (மேல்நிலை) ரூ. 62, இந்திய இசை (கீழ்நிலை) ரூ. 27, இந்திய இசை (மேல்நிலை) ரூ. 37, இதர பாடங்கள் (கீழ்நிலை) ரூ. 37 இதரபாடங்கள் (மேல்நிலை) ரூ. 47 விண்ணப்பக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியை அனுகவும்.

ஏப்ரல் 26ம் தேதி மாலை 5 மணி வரை சேவை மையங்கள் மூலம் ஆனலைனில் விண்ணப்பிக்கலாம்.

English summary
Director of the Department of State Tests Tan. Vasundradevi has told that Technical Examinations in various subjects (Drawing, Dancing, and Tailoring) Interested candidates can apply at www.dge.tn.gov.in from April 20.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia