டீச்சர் ட்ரெயினங் டிப்ளமா படிப்பு... கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

Posted By:

தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு (Teachers Training Diploma) ஒற்றைச் சாளர முறை மாணவர் சேர்க்கைக்கு இணையவழி மூலம் கலந்தாய்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி - பயிற்சி நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2015-16-ஆம் கல்வியாண்டுக்கான தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு ஒற்றைச் சாளர முறை மாணவர் சேர்க்கைக்கு இணையவழி மூலம் கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஜூன் 4-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் ஒப்படைக்கலாம்.

கலந்தாய்வு விவரம்: சிறப்புப் பிரிவினருக்கு (மாற்றுத் திறனாளிகள், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் பேரன், பேத்திகள், முன்னாள் ராணுவத்தினரின் மகன், மகள்) ஜூலை 1-ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும். ஆங்கில மொழியில் பயில விண்ணப்பித்துள்ள மாணவிகள், சிறுபான்மை மொழியில் பயில விண்ணப்பித்துள்ளவர்களுக்கு ஜூலை 2-ஆம் தேதியும், தொழிற்பிரிவு மாணவர்களுக்கு ஜூலை 3-ஆம் தேதியும் கலந்தாய்வு நடத்தப்படும்.

கலைப்பிரிவினருக்கு ஜூலை 4, 6 ஆகிய தேதிகளிலும் அறிவியல் பிரிவினருக்கு ஜூலை 7,8,9,10 ஆகிய தேதிகளிலும் கலந்தாய்வு நடைபெறும், என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The counselling dates for candidates who applying for Teachers Training diploma course has been announced by Education Department of Tamil Nadu.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia