தமிழ்நாடு வேலையில்லா பிஏட் கணினி ஆசிரியர்கள் கோரிக்கை மனு !!!

Posted By:

தமிழக துணை முதலமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அவர்களை சந்தித்த பிஎட் கணினி வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் மனு அளித்துள்ளனர்.

தமிழக துணை முதல்வரிம் பிஏட் கணினி ஆசிரியர்கள் மனு

மாண்புமிகு துணை முதலமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஏ.கே. செங்கோட்டையன் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்ட மனுவில் அரசின் 3 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கணினி பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது . அரசின் இந்த தொலைநோக்கு கொள்கைக்கு நன்றி தெரிவித்த பிஏட் கணினி ஆசிரியர்கள் அவர்களது வாழ்வாதர தேவைகளை நிறைவேற்றித்தருமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்டைய மாநிலங்களில் உள்ளதுபோல் தமிழ்கத்திலும் 1 ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை கட்டாய கணினி தேர்வு வைக்க வேண்டும். ஆறாவது பாடமாக இருக்க கணினி அறிவியல் இருக்க வேண்டும்.

புதியப்பாடத்திட்டத்தில் கட்டாயமாக்கும் கணினி அறிவியல் பாடத்தில் மாணவர்கள் முறையாக பயிற்றுவிக்க பி.ஏட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்

கணினி ஆசிரியர்கள் அரசு பள்ளிகளான ஆரம்ப பள்ளி ஒன்று முதல் 5 வரை மற்றும் 5 முதல் 8 வரை நடுநிலைப்பள்ளி அத்துடன் 9 முதல் 10 வரை மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி 11 முதல் 12 வகுப்பு வரை அரசு பள்ளிகளில் ஓரு பிஏட் ஆசிரியர்களையாவது நியமிக்க வேண்டும். 

அரசு பள்ளிகளில் கணினிப்பாடம் கொண்டு வருவதால் கிராமப்புற நகர்புற மாணவர்கள் கோடிக்கண்க்கான மாணவர்கள் இதில் பயண அடைவார்கள் என்று நம்பபடுகிறது .
மேலும் இத்துடன் பிஏட் கணினி ஆசிரியர்களின் வாழ்வாதர கோரிக்கைய்யையும் நிறைவேற்றித் தந்து தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது .

இவ்வாறு தமிழ்நாடு பிஏட் ஆசிரியர்களின் தேவையை பூர்த்தி செய்ய பிஏட் கணினி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பாக மாநில பொதுச் செயலாளர் குமரேசன் அவர்கள் தலைமையில் மனுகொடுக்கப்பட்டது .

சார்ந்த பதிவுகள்:

பிஏட் பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்கள் நாற்பதாயிரம் பேர் வேலையற்ற நிலையில் காத்திருப்பு

40 ஆயிரம் பி.எட் பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு வாய்ப்பு கொடுக்குமா?

English summary
here article tell about BED Computer science teachers requirement petition
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia