டெட் தேர்விற்கு இன்னும் இரண்டே நாள்தான் இருக்கு... தயாராகி விட்டீர்களா..? இதோ உங்களுக்காக ....

Posted By:

சென்னை : இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 29ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு ஏப்ரல் 30ம் தேதியும் நடைபெறும் என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் இந்த தேர்வினை எதிர்கொள்ள உள்ளனர்.

டிஇடி தேர்விற்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு இன்னும் இரண்டே நாட்களில் தேர்வு. உங்களுக்காக குட்டி குட்டி டிப்ஸ் இதோ...

1. முதலில் தேர்வு நாளில் அதிகாலையில் சீக்கிரமாக எழுந்து செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல வேண்டிய நேரத்திற்கு குறைந்தது அரைமணி நேரமாவது முன்னதாகவே சென்று விடுங்கள். அப்படிச் சென்றாலே பாதி டென்சன் குறைந்து விடும்.

டெட் தேர்விற்கு இன்னும் இரண்டே நாள்தான் இருக்கு... தயாராகி விட்டீர்களா..? இதோ உங்களுக்காக ....

2. மேலும் தேர்விற்குத் தேவையான ஹால்டிக்கெட், அடையாள அட்டை, புகைப்படம் (தேவைப்படுவோர்) போன்றவற்றை தேர்விற்கு முந்தைய நாளே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

3. மேலும் நீங்கள் தேர்வு எழுத எந்த பகுதிக்குச் செல்ல வேண்டும் என்பதைக் குறித்த விபரங்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளுங்கள். அந்தப் பகுதிச் செல்ல எவ்வளவு நேரம் எடுக்கும், எந்த வழித்தடத்தில் செல்ல வேண்டும் என்ற தகவல்களை முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

4. தேர்வு தொடங்குவதற்கு முன் அரை மணி நேரம் அமைதியாக இருங்கள். தேர்வு அறைக்குச் செல்லும் வரை படித்துக் கொண்டே இருக்காதீர்கள். அமைதியாக இருப்பது பல குழப்பங்களைத் தவிர்க்கும்.

5. வினாத்தாளை கையில் வாங்கிய உடன் அதை நன்றாக, நிதனமாக வாசித்துப் பாருங்கள். ஒரு முறைக்கு இரு முறை கேள்வியை வாசித்துப் பதில் அளித்தாலே நல்ல மார்க்குகளை பெற முடியும்.

6. பல கேள்விகளில் கேள்விக்குள்ளேயே பதில் ஒளிந்து இருப்பதை எளிதாக கண்டு கொள்ள முதலில் கேள்வியை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். பின் கேள்வி நேரடியாக கேட்கப்பட்டிருக்கிறதா அல்லது மறைமுகமாக கேட்கப்பட்டிருக்கிறதா என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் விடையளிக்க

வேண்டும்.

7. தெரிந்த கேள்விகளுக்கு முதலிலேயே பதில் எழுதி விடுங்கள். தேர்வு எழுதிக் கொண்டே இருக்கும் போது ஏதாவது ஒன்று தெரியவில்லை என்றால் அதைப் பற்றி யோசித்துக் கொண்டே இருந்து நேரத்தை வீண் செய்யக் கூடாது.

8. தெரியாத கேள்விகளை விட்டுவிட்டு நன்றாக தெரிந்த மற்ற கேள்விகளுக்கு முதலில் விடையளிக்க வேண்டும். பின்பு தெரியாத மற்ற கேள்விகளுக்கு கேள்வியை நன்கு வாசித்துப் பார்த்து அதனுடைய தொடர்புடைய பதிலைத் தேர்வு செய்து விடையளிக்க வேண்டும்.

9. தேர்வுக்கு முந்தைய நாள் ரொம்ப நேரம் கண்விழித்துப் படிக்கக் கூடாது. போதிய ஓய்வு மற்றும் உணவு இரண்டும் மிக முக்கியம். தேர்வு நாள் காலையில் கட்டாயம் சாப்பிட்டு விட்டு தேர்வுக்குச் செல்லுங்கள். தேர்வறைக்கு தண்ணீர் எடுத்துச் செல்லுங்கள்.

10. தேர்வுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருப்பதால் புதிதாக எதையும் படிக்காதீர்கள். படித்தவற்றை நன்கு ரிவிசன் விடுங்கள். ரிலாக்சாக தேர்வு எழுதுங்கள். தன்னம்பிக்கையோடு தைரியத்தோடு தேர்வை எதிர் கொள்ளுங்கள்.

துணிவே துணை. ஆல்தி பெஸ்ட் ஸ்டூடண்ஸ்.

English summary
Given the little tips very useful for you at the time of examination. Teacher Eligibility Test tips given for all students. Tet Exam will be held on 29&30.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia