டிஇடி (டெட்) தேர்விற்கு ரெடியாவது எப்படி?

Posted By:

சென்னை : இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 29ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு ஏப்ரல் 30ம் தேதியும் நடைபெறும் என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

டிஇடி தேர்விற்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு தேவையான டிப்ஸ்

1. டெட் தேர்விற்கு படிக்கும் போது முழுக் கவனத்துடன் பாடங்களைப் படிக்கவேண்டும். ஒவ்வொரு பாடத்திலும் உள்ள பாடத்தலைப்புகள், துணைத் தலைப்புக்கள், ஆசிரியர் பெயாகள், குறிப்புகள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்துப்படிக்கும்போது பாடப்பகுதி எளிதில் மனதில் நிற்கும்.

2. படிக்கும் பாடங்களை கவனமாக அர்த்தம் புரியும்படி படிக்க வேண்டும். படித்தப் பாடங்களை நாம் நமக்கு தெரிந்தவற்றோடு தொடர்புபடுத்தி உதாரணத்தோடு படிக்கும் போது நமக்கு படிக்கும் பாடம் மறக்காது.

3. புத்தகத்தில் மிகவும் முக்கிய வார்த்தைகள் மற்றும் குறிப்புகளுக்கு அடிக்கோடிட்டு படிக்க வேண்டும். அப்படி செய்யும் போது நாம் திருப்பிப் பார்க்கும் போது குழப்பமில்லாமல் எளிதாகப் பாடத்தை நினைவிற்கு கொண்டு வர முடியும்.

4. படிக்கும் போது நல்ல சூழ்நிலையில் படிக்க வேண்டும். தேவையான அளவு ஓய்வு எடுத்துப்படிக்க வேண்டும். படிக்கும் போது குழுவாக படிப்பது நல்லது. படித்தவற்றை நண்பர்களோடு பகிர்ந்து கொள்வது சிறந்தது. அதுப் பாடங்களை விரைவாகப் படிப்பதற்கு உபயோகமாக இருக்கும்.

5. தேர்வுக்கு நன்றாகப் படித்துவிட்டோம் என்ற எண்ணம் உங்களுக்கு ஏற்படும் வரை நன்றாகப் பாடங்களைப் படியுங்கள். அதன்பிறகு மாதிரி வினாத்தாள்களை குறிப்பிட்ட நேரத்திற்கள் எழுதிப் பார்க்க முயற்சிக்க வேண்டும்.

6. பாடங்களைப் படிக்கும் போது ஒரு பிரிவை முழுமையாகப் படித்த பிறகுதான் அடுத்தப் பகுதிக்கு போனும். இப்படிப் படித்தால் படிக்கும் பாடப்பகுதிகளை தெளிவாகப் படிக்க முடியும்.

7. ஒவ்வொரு பாடப்பகுதியையும் படித்து முடித்த பிறகு அந்தப் பாடப்பகுதியில் உள்ள கேள்விகள் மாதிரித்தாளில் இருக்கின்றனவா அது உங்களுக்கு தெரிந்திருக்கிறதா என சோதித்து அறிந்து படிப்பது நல்லது.

8. தேர்வுக்கு முந்தைய நாள் புதுப் பாடங்களைப் படிப்பதைத் தவிர்க்க வேண்டும். இதனால் தேவையில்லாத பதட்டம் வருவதைத் தவிர்க்க முடியும்.

9. தேர்வு எழுதும் போது படித்தவற்றை நிதானமாகச் சிந்தித்து விடையளிக்க வேண்டும். பதட்டம் இல்லாமல் நிதானமாகச் சிந்திக்கும் போது உங்களுக்கு படித்தவைகள் எளிதில் நினைவுக்கு வரும்.

10. ஒரு வினாவிற்கான விடை நினைவில் வராமல் போனால் அதையே நினைத்துக் கொண்டு அதனுடனே போராடிக் கொண்டிருக்கக் கூடாது. அந்த நேரத்தில் அதைவிட்டு விட்டு மற்ற விடைகளை எழுத வேண்டும். கடைசியாக அந்த கேள்விக்கு யோசித்து விடையளிக்க வேண்டும்.

English summary
Given the little tips very useful for you at the time of examination. Teacher Eligibility Test tips given for all students. Tet Exam will be held on 29/04/2017 and 30/04/2017.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia