ஆசிரியர்தினத்திற்கான ஆசிரியர், மாணவர்களுக்கு சிறப்பு கட்டுரை போட்டி !!

Posted By:

ஆசிரியர் தினத்தையோட்டி ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவருக்கும் கட்டுரைபோட்டியில் பங்கேற்க தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அனைவருக்கும் கட்டுரை போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு அறிவியல்  இயக்கம் அறிவிப்பு

ஆசிரியர்தினத்திற்காக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் அதன் கௌரவ தலைவர் ஆசிரியர் மாணவர்களுக்கு ஆசிரியர்தினத்தை சிறப்பிக்க கட்டுரை போட்டியில் பங்கேற்க மாணவர்கள், ஆசிரியர்கள் ஊர் மக்கள் ஆகியோர்க்கு அழைப்பு விடுத்துள்ளார் . ஆசிரியர்களுக்கு  "என்னை செதுக்கிய புத்தகம்" மற்றும் மாணவர்களுக்கு " கனவு ஆசிரியர் " என்ற தலைப்பிலும் பொதுமக்களுக்கு "எங்க ஊரு" , "எங்க பள்ளி" என்ற தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும். கட்டுரை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகின்றன .

ஆசிரியர் தினத்தையொற்றி வருடா வருடம் கட்டுரை போட்டிகள் நடைபெறுவது வழக்கம் ஆகும் . இவ்வருடமும் ஏ3 அல்லது ஏ4 தாழில் 3 பக்கம் இருத்தல் போதுமானது ஆகும் . கைப்பட எழுதியிருத்தல் போதுமானது ஆகும் . கட்டுரைத்தாளின் முகப்பில் போட்டியாளரின் பெயர், முகவரி, சரியாக குறிப்பிட்டிருக்க வேண்டும் . பொதுமக்கள் எழுதும் கட்டுரையில் பள்ளியின் பெயர் குறிப்பிட்டு இருக்க வேண்டும் . ஆசிரியர்கள் எழுதும் கட்டுரையில் பள்ளி, கல்லுரி முகவரி தெரிவிக்கப்பட வேண்டும் . ஒருவர் ஒரு படைப்பை மட்டும் அனுப்ப முடியும் . போட்டியில் வெல்வோர்க்கு நினைவு பரிசு வழங்கப்படும் .

சிறந்த படைப்புக்களாக தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் , ஆசிரியர்கள் , பொதுமக்கள் கட்டுரைகளில தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் துளிர், விஞ்ஞான சிறகு, விழுது உள்ளிட்ட இதழ்களில் பிரசுரம் செய்யப்படும் . ஒவ்வொரு பிரிவுகளில் மாவட்ட அளவில் சிறந்த படைப்புகளுக்கு நினைவு பரிசு வழங்கப்படும் .

படைப்புகள் அனைத்தையும் போட்டி ஒருங்கிணைப்பாளர் கே. காத்தவராயன், 2 கம்மாளர் தெரு , புதுப்பாளையம் அஞ்சல் , செங்கம் வட்டம், திருவண்ணாமலை 606 705 என்ற முகவரிக்கு செபடம்பர் 10 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் . தேவையான விவரங்களை பெற 9751124532 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விருப்பமுடையயோர்கள் தங்கள் கனவு ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளை பெருமைப்படுத்த வேண்டும்மெனில் எழுதி அனுப்புங்கள் .

சார்ந்த பதிவுகள் : 

நாளை ஆசிரியர் தினம்: 377 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது

நல்லாசிரியர் விருது வழங்கும் முறையில் மாற்றம் கல்வித்துறை திட்டம்

பள்ளி மாணவர்களுக்கு ஒன்றியம் முதல் மாநிலம் வரை நுண்கலை போட்டிகள் !!

English summary
here article tell about teachers day competition for teachers and students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia