ஆசிரியர்களின் சிறப்புகள் மற்றும் பொண் மொழிகள்

ஆசிரியர்களின் பொன்மொழிகள் சிறப்புகள்

By Sobana

ஆசிரியர்கள் மாணவர்களிடையே என்றும் இணக்க சூழலை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள் தான் , ஒரு ஆசிரியர் தனது மாணவர்களின் மீது காட்டும் உன்னதமான கண்காணிப்பே அந்த மாணவனை பின்னாளில் சிறந்து விளங்க செய்கிறது . களிமண்ணாய் கிடந்த மாணவனை இணைத்து அவனுக்கு உரு கொடுத்து அவனை பக்குவப்படுத்தி இந்த உலகிற்கு நல்லதொரு குடிமகனாய் வழங்கும் பெருமை ஆசியருக்கே பொருந்தும் .

ஆசிரியர்கள் இல்லாத மனித வாழ்வு என்பது இருக்க இயலாது . படித்து பட்டம் பெற்றவனுக்கும் , படிக்காமல் பட்டறவு பெற்றவனுக்கும் என்றும் மூலதனம் அவன் பெற்ற ஆசிரியர்கள்தான் . ஆசிரியருக்கு மட்டும் என்றும் அந்த தனித்தன்மையுண்டு . உலகில் உள்ள பெரிய மனிதர்களாக இருக்கட்டும் சிறியளவில் வாழ்பவராக இருக்கட்டும் இரு தரப்பிற்கும் வழிகாட்டியாக இருப்பவர் ஆசிரியர் ஆவார் .

அப்துல்கலாம்:

சிறந்த ஆசிரியர்கள் மற்றும்  ஆசிரியர்களின் பொன்மொழிகள்

இந்தியாவின் மக்கள் குடியரசு தலைவர் என அழைக்கப்படும் திரு ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்கள் தன் வாழ்நாளில் மிகச்சிறந்த மனிதராக , விஞ்ஞானியாக , நல்ல குடிமகன் மற்றும் குடியரசு தலைவராக இருக்கும் போதும் அதிகம் அவர் நம்பியது மாணவர்கள் மற்றும் அவர்களை திறம்பட உருவாக்கும் ஆசிரியர்கள் சமுதாயத்தை அதிகமாக நம்பினார் அத்துடன் ஆசிரியராக ஒரு ஆசியரை பெருமைப்படுத்திய பெருமை அவரையே சாரும் .

அப்துல்கலாம் அவர்கள் ஆசிரியர்களை பற்றி தெரிவித்த கருத்து :

" மோசமான ஆசிரியரிமிருந்து ஒரு நல்ல மாணவன் கற்றுகொள்வான் "

சிறந்த ஆசிரியரான அப்துல்கலாம் வகுப்பறையை

"நாட்டின் மிகச்சிறந்த அறிவு வகுப்பறையின் கடைசி இருக்கையில் இருக்கலாம் " என்று மாணவர்களுக்கு தனது கருத்துகளாக் உர்ச்சாகம் மூட்டுகிறார் .

வகுப்பறையின் கரும்பலகை வாழ்வின் ஒளிருமிடமாக்குகிறது என பள்ளி கரும்பலகையின் மகத்துவத்தை அறிய செய்கிறார்.

சாதரண மாணவராக இருந்து ஆசியராக மாறியது பெருமிதப் படசெய்கிறது
என்று ஆசிரியத்துறையை பெருமிதப்படுத்துகிறார்.

மன்மோகன் சிங்:

இந்தியாவின் சிறந்த பிரதமர்களுள் ஒருவராக இருந்து நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இழுத்து சென்ற பொருளாதார மேதை மற்றும் ஆசிரியர் மன்மோகன் சிங் நாட்டையும் தனது மாணவர்களையும் வழி நடத்து செல்வதில் சிறப்பாக செயல்ப்பட்டார்.

"வாழ்வு என்பது எளிய கட்டமைப்பு கொண்டதல்ல அதனை எதிர்கொண்டு கற்க வேண்டும்"
என ஆசியராக இருந்தவர் தெரிவிக்கும் எளிய கோட்பாடுகள் .

கல்வி கண் திறந்த காமராசர் :

சிறந்த ஆசிரியர்கள் மற்றும்  ஆசிரியர்களின் பொன்மொழிகள்

தமிழ்நாட்டில் பள்ளி செல்லா இயலாத மாணவர்கள் படிப்பு கற்க வேண்டி இலவச கல்வியுடன் வருமையில் படிக்க முடியாதநிலை அறிந்து அவர்களுக்கு மதிய உணவு கொடுத்து மாணவர்கள் படிக்க உதவியாக இருந்தவர் தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் காமராஜ் ஆவார் . பட்டறிவு மட்டுமே பெற்ற காமராஜ் தமிழ்நாட்டு மாணவர்கள் படிப்பறிவு பெற காரணமாக இருந்த படிக்காத மேதை காமராஜ் .

காமராஜ் " ஒன்றை செய்ய விரும்புகிற போது அதை செய்வதற்காகவே இருக்கிறோம் என எண்ண வேண்டும்" என்கிறார் . படிக்காத மேதையிடம் இருந்த தன்னம்பிக்கையே இன்றைய ஆசிரியர்கள் மாணவரளுக்கு புகட்டும் பாடமாகும் .

சார்ந்த பதிவுகள்:

அறிவோம் பாரம்பரியமிக்க இந்திய ஆசிரியர்களும் அவர்களது ஆக்கமும் !!அறிவோம் பாரம்பரியமிக்க இந்திய ஆசிரியர்களும் அவர்களது ஆக்கமும் !!

ஆசிரியர்தினத்திற்கான ஆசிரியர், மாணவர்களுக்கு சிறப்பு கட்டுரை போட்டி !!ஆசிரியர்தினத்திற்கான ஆசிரியர், மாணவர்களுக்கு சிறப்பு கட்டுரை போட்டி !!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tell about teachers day special quotes
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X