ஆசிரியர்கள் தின கொண்டாட்டத்துடன் ஆசிரியர்களின் சிறப்புகள்

ஆசிரியர்கள் இருளில் வாழும் உலகை இழுத்து செல்லும் வல்லமை கொண்டவர்கள்

By Sobana

கல்வி கண் திறக்கும் ஆசிரியர்கள் தேசித்தின் ஆன்மாக்களை இயக்கும் வல்லமை கொண்டவர்கள் . சமுதாயம் என்ற கட்டமைப்பை சரியாக இணைக்கும் வல்லமை அவர்களிடமே இருக்கின்றது . அத்தகைய சிறப்பு வாய்ந்த ஆசிரியர்களை பெருமைப்படுத்த வேண்டியது நமது கடமையாகும் . நாம் என்னவாக வேண்டும் என்பதை நமக்கு புரிய வைப்பவர்கள் ஆசிரியர்கள்தான் , ஆசான் இல்லா உலகம் அமைதியற்ற பூங்காவை போல் இருக்கும் . ஆசான் என்பவர்கள் உலகத்தின் ஆக்கத்திற்கு அடிகோலியவர்கள் இன்னும் அடிகோலுபவர்கள் சிறந்த மனிதர்களுக்குள் ஆசிரியர்களின் தாக்கம் நிச்சயம் இருக்கும் .

ஆசிரியர்கள் உலகின் ஒளி போன்றவர்கள்  அவர்களை கொண்டாடும் இந்தியா

ஆசிரியர்களுக்கு நாம் கொடுக்க வேண்டியது மட்டற்ற மரியாதையை என்றும் கொடுக்க வேண்டும் . நாம் எந்த அளவிற்கு ஆசானிடம் சமர்பணம் செய்கின்றோமோ அந்தளவிற்கு ஆசிரியர்களிடம் கற்றுகொள்ளலாம் . தன்னை ஆசானிடம் சமர்பித்தவர்களே பூமியில் மிகபெரும் வெற்றியை பெருகின்றனர்.
இத்தகைய பெருமை வாயந்த ஆசிரியர்களின் உழைப்பையும் அவர்களின் பங்களிப்பையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும் .

நாட்டை காத்த கியூபா ஆசிரியர்கள்:

1960களில் குழந்தைகள் குடிக்க பால் இல்லை நாடெங்கும் அவலம், கியூபாவின் புரட்சி வெற்றிக்குப்பின் நாட்டை பொருளாதார தடைகளாலும் , நச்சு பொடிகளை வானிலிருந்து தூவி மக்களை நோயால் ஆட்கொள்ள வைத்து மருத்தவமும் , குடிக்க பாலின்றி தத்தளிக்க வைத்தது அமெரிக்கா. அமெரிக்க வல்லரசை எதிர்த்து நின்று போராடி வெற்றி பெற்ற கர்வத்தில் இருந்த காஸ்ட்ரோவுக்கு அமெரிக்கவின் இத்தகைய நடவடிக்கைகளிலிருந்து நாட்டை காக்க வேண்டிய பொருப்பு இருந்தது .

ஆசிரியர்கள் உலகின் ஒளி போன்றவர்கள்  அவர்களை கொண்டாடும் இந்தியா

பிடல் காஸ்ட்ரோ காட்டாற்று வெல்லத்தில் மக்கள் தவித்து கொண்டிருந்தனை என்னி வருத்தம் கொள்ளவில்லை மாறாக மக்களை காக்க என்னம் கொண்டார். தேசத்து மக்களுக்கு தொடர்ந்து நம்பிக்கையுரையாற்றினார். மக்கள் மிகுந்த நம்பிக்கை பெற செய்தார் . தேச மக்களுக்கு அவர் வங்கி, பொருளாதாரம் கற்றுகொடுக்க திட்டமிட்டார். நாட்டில் 22 சதவீகிதம் இருந்த கல்வி வளர்ச்ச்சியை 98.2 சதவீகதம் கல்வி வளர்ச்சியை பெருக்கினார்.

கியூபா தேசத்தில் ஆசிரியர்கள்:

ஆசிரியர்கள் தின சிறப்புகள்

ஆசிரியர்கள் தின சிறப்புகள்

தெரிந்தவர்கள் கற்றுகொடுங்கள் தெரியாதவர்கள் கற்றுகொள்ளுங்கள்

உலகின் ஒளி ஆசிரியர்கள்

உலகின் ஒளி ஆசிரியர்கள்

உலகிற்கு முன்னுதாரணமான கியூபா கல்வி வளர்ச்சி 

ஆசிரியர்கள் குழுவும் வெற்றியும்

ஆசிரியர்கள் குழுவும் வெற்றியும்

நாட்டை அறிவாக்கும் ஆயுதம் ஆசிரியர்கள் கையில் இருக்கும் கற்பித்தல் தன்மை ஆகும் 

கற்றலின் ஒழுங்கு ஆசிரியர்கள்

கற்றலின் ஒழுங்கு ஆசிரியர்கள்

கற்றலின் ஒழுங்கு ஆசிரியர்களின் கையில் இருந்துதான் கிடைக்கும் 

கியூபாவில் ஃபிடலின் உரைகள் நாட்டு மக்களுக்கு சுப்ரபாதம் போல் இருந்தது அனைவரின் வீட்டிலும் காஸ்ட்ரோவின் வீர உரை கேட்கப்பட்டது .கியூபாவில் அனைவருக்கும் எழுத்தரிவிக்க திட்டமிடப்பட்டது.

விவசாயம் செய்த ஆசிரியர்கள்:

கியூபாவில் ஆசிரியர்களுக்க்கு பாடங்களுடன் விவசாயம் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டது. கியூப வளர்ச்சிக்கு பள்ளியில் படித்து வீடு திரும்பிய மாணவர்கள் காடா விளக்கை கையில் ஏந்தி நாடெங்கும் உள்ள மக்களுக்கு வங்கி, பொருளாதாரம், சமத்துவம், உழைப்பு என தாங்கள் கற்ற் அனைத்தையும் பொது மக்களுக்கு கற்பித்தனர் . கியூபாவில் பல்லுபோன பாட்டி படிக்க வேண்டும் , பழக்கடைக்காரர் படிக்க வேண்டும் . வயது வரம்பின்றி அனைவரும் பாடம் கற்க வேண்டும் .

கியூபாவில் ஒட்டு போட்ட துணியை ஒன்பது வருடம் பயன்படுத்தும் மக்கள் இருந்தனர். 37 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் உலகத்தில் இதுவரை இப்படியொரு சராசரியில் நாம் எங்கும் மாணவர்களை காண முடியாது . கியூபாவில் அவ்வளவு கஷட நெருக்கடியிலும் மக்கள் வெற்றி பெற்றனர் .
தெரியாதவர்கள் கற்றுகொடுங்கள் தெரிந்தவர்கள் கற்று கொள்ளுங்கள் என்ற எழுத்தறிவு மந்திரத்தை கொண்டு வெற்றி கரமாக கியூபாவை சிறந்த படிப்பறிவு மிக்க நாடாக ஜொலிக்க வைத்தனர் . கியூபாவின் கல்வி வளர்ச்சிக்கு இந்தியாவும் தன் பங்கிற்க்கு உதவியது .

கியூபாவ்வின் 98 % கல்வி வளர்ச்சியை யுனிசெஃப் இந்தியாவிற்கு எடுத்துக்காட்டி அவ்வளவு சிக்கலிலும் கியூபா வென்றுள்ளது . இந்தியாவும் இதுபோன்ற வளர்ச்சியை எட்ட வேண்டும் என்றது . இவ்வளவு சிறப்பும் பெருமையையும் கியூபா அடைவதற்கு முக்கிய காரணம் ஆசிரியர்களுக்கு பெரும் பங்குண்டு என்பதை மறுக்க முடியாது .இத்தகைய பெருமைமிக்க ஆசிரியர்களை என்றும் நாம் கொண்டாட வேண்டும் . இந்தியாவில் என்றும் ஆசிரியர்களுககென்று தனி மதிப்புண்டு அதனால் உலகமே இந்தியாவின் பாரம்பரியத்தை அன்னாந்து பார்க்கின்றது.

சார்ந்த பதிவுகள்:

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tell about teachers day celebration along with special teachers
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+