முதல் துணை குடியரசு தலைவர் யார் தெரியும்?

ஹாய் செல்லக் குட்டீஸ்...! உங்களுக்கு ஆசிரியர் தினம் எப்போது கொண்டாடுகிறோம்; அன்றைய தினம் யார் பெயரை அதிகமாக உச்சரிப்போம் என்பது குறித்து தெரியும்?

 

அதுகுறித்து உங்களுக்கு தெரிஞ்சிருந்தா...! நீங்க தான் 'பிர்லியன்ட்'. தெரியாத குட்டீஸ்க்கு நீங்க படிச்சு சொல்லுறீங்களா?

பெருந்தகை குறித்து அறிவோம்...!

வாங்க நாம கட்டுரையை படிப்போம்...! மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தெய்வத்திற்கு மேலாக வைத்து பூஜிக்கப்பட வேண்டிய ஒருவர் யார் என்றால், அது ஆசிரியர் தான். ஒரு சமுதாயத்தின் வீழ்ச்சியும், எழுச்சியும் ஆசிரியர்கள் வசம் தான் உள்ளது.

பேராயுதம் ஆசிரியர்

ஆசிரியர் என்ற பெருந்தகை நினைத்தால், பல நல்ல கருத்துகளை எதிர்கால தலைமுறையான மாணவர்களின் மனதில் பதிய வைத்து,

 

அவர்களை ஒழுக்கத்திலும், அறிவிலும், ஆற்றலிலும் சிறந்து விளங்க வைத்து, நாட்டின் மகாமேதைகளாக முன்னிறுத்த முடியும்.

ஆசிரியர்கள் நினைத்தால், ஒரு நாட்டின் தலைவிதியையே மாற்றி அமைக்க முடியும். அதே சமயம் ஆசிரியர்கள் அவர்தம் மாணவர்களுக்கு நல்ல பண்புகளையும் சிறந்த பயிற்சிகளையும் அளிக்கத் தவறிவிட்டால், மாணவர்கள் அவர்களது வாழ்க்கையில் தடம்புரண்டு, அவர்தம்

குடும்பத்திற்கும், நாட்டிற்கும் பயனற்றவர்களாக போய்விடுவார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஆசிரியர் தினம்

அன்னையர் தினம், நண்பர்கள் தினம், காதலர் தினம், சகோதர் தினம், என, பல தினங்களை தங்களுக்கு ஏற்றவாறு, இன்றைய தலைமுறை கொண்டாடி வருகின்றனர்.

இந்த தினங்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு விதமாக, ஒவ்வொரு நோக்கத்துடன் கொண்டாடப்படுகிறது. அந்த வரிசையில், ஒழுக்கம், தன்னம்பிக்கை, பொது அறிவு ஆகியவற்றை கற்பிக்கும் ஆசிரியர்களை சிறப்பிக்கும் வகையில், சுதந்திர இந்தியாவில் ஆசிரியர் தினம் செப்டம்பர் 5ல் கொண்டாடப்படுகிறது.

உலகளவில், பொதுவாக அக்டோபர் 5ம் தேதியும், சீனா, மலேசியா, ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளிலும் கொண்டாடப்படுகிறது.

பெருந்தகை குறித்து அறிவோம்...!

முதல் குடியரசு துணை தலைவர்

சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிறது. இத்தகைய இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவர், இரண்டாவது குடியரசுத் தலைவர் போன்ற அடையாளங்களோடு நம் மனதில் நிற்பவர் டாக்டர் இராதாகிருஷ்ணன்.

கடந்த1888ம் ஆண்டு, செப்டம்பர் 5ம் நாள் திருத்தணிக்கு அருகில் உள்ள சர்வபள்ளி என்ற ஊரில் பிறந்தார். வீராச்சாமி - சீதம்மா ஆகியோர், அவரின் பெற்றோர் ஆவர்.

தெலுகு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட இராதாகிருஷ்ணன் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்தவர்.

ஆரம்பக் கல்வியை திருவள்ளூருக்கு அருகில் உள்ள "கௌடி' என்ற ஊரி லும், உயர்நிலைப் படிப்பை திருப்பதியில் உள்ள லூத்தரன் மிஷன் உயர்நிலைப்பள்ளியிலும் கற்றார்.

பின் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் சேர்ந்து, இளகலையில் தத்துவம் பயின்று பட்டம் பெற்றதோடு, முதுகலைப் பட்டமும் அப்பிரிவிலேயே அக்கல்லூரியிலேயே பெற்றார். உதவித்தொகை பெற்றே கல்வியைக் கற்று, உயரிய பதவியை பெற்ற மாபெரும் மனிதர் என்பதை மறைக்க முடியாது.

இடைவிடாத கல்வி பணி

தனது 16 வயதிலேயே சிவகாமு என்பவரை மணந்தார். அவருக்கு ஐந்து பெண் குழந்தைகளும், ஒரு மகனும் இருந்தனர். முதுகலைப் பட்டம் பெ ற்ற இராதாகிருஷ்ணன், 1909ல் சென்னை பிரசிடென்சி

கல்லூரியில் உதவி விரிவுரையாளராகச் சேர்ந்து திறம்படப் பணியாற்றி னார்.

கடந்த 1918ம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தில் தத்துவத்துறை பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர், அவரின் தனித்திறமைகள் கா ரணமாக, 1921ம் ஆண்டு கொல்கத்தா பல்கலைக்கழகத்திற்கு பேராசிரியராகப் பரிந்துரை செய்யப்பட்டார்.

பெருந்தகை குறித்து அறிவோம்...!

பணி ஊடே நூல் எழுதும் பணி

தனது ஆசிரியர் பணிக்கு இடையேயும், பல்வேறு நூல்களை எழுதியது அவரின் புகழை மேலும் உயர்த்தியது. முதன்மை உபநிடதகள், இந்துக்களின் வாழ்க்கை நோக்கு, கிழக்கும் மேற்கும், தம்மபதம், மகாத்மாகாந்தி, இந்தியர் தத்துவம், இந்தியச் சமயங்கள், உண்மையான கல்வி, சமயமும் கல்வியும் உள்ளிட்ட அவர் எழுதிய முக்கிய நூல்கள்.

இவற்றில் 1923ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்தியத் தத்துவம் என்ற நூல் பாரம்பரியத் தத்துவத்தின் தலைசிறந்த படைப்பாகப் போற்றப்பட்டு வருகிறது.

பன்முக வித்தகர்

இந்துமத இலக்கியத் தத்துவகளான உபநிடதகள், பகவத் கீதை பிரம்ம சூத்திரா போன்றவற்றையும், சகரா, மாதவர், இராமானுஜர் போன்றோரின் வர்ணனைகளையும் சிறப்புடன் கற்றார்.

பல பதவிகளை அலங்கரித்த பெருந்தகை

சிந்தனையாளர்களான பிளாட்டோ, ப்ளோடின, பிராட்லி, காந்தி போ ன்றவர்களின் தத்துவகளையும் கற்று புலமை பெற்றார். அவரின் புலமை கண்டுவியந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் டாக்டர் இராதாகிருணனை இந்துமதத் தத்துவகளைப் பற்றி விரிவுரையாற்ற அழைப்பு விடுத்தது.

ஆந்திரப் பல்கலைக்கழகம், பெனாரஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர் பதவிகளை அலகரித்த டாக்டர் 1946ல் யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார்.

1948ல் பல்கலைக்கழக கல்வி ஆணையத் தலைவராகப் பொறுப்பேற்று, நாட்டிற்கு சிறந்த கல்வித் திட்டகளை வடிவமைத்துத் தந்தார். 1949ல் சோவியத் யூனியனின் தூதுவராக நியமனம் பெற்ற டாக்டர்

இராதாகிருணன் இரு நாடுகளுக்கும் வலுவான நல்லுறவு நிலவ வித்திட்டார் என்பதில் மிகையில்லை.

பெருந்தகை குறித்து அறிவோம்...!

இரு முறை உயரிய பதவி

1952ம் ஆண்டு முதல் இரண்டு முறை துணைக் குடியரசுத் தலைவராக நியமனம் செய்யப்பட்ட அவர், 1962ம் ஆண்டு, நாட்டின் பொறுப்புமிக்க குடியரசுத் தலைவராக பொறுப்பேற்று கொண்டார்.

டாக்டர் இராதாகிருஷ்ணனின் சேவையையும், உழைப்பையும் கௌரவப்படுத்தும் விதமாக, 1954ம் ஆண்டு பாரத ரத்னா விருது இந்திய அரசால் வழங்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் பொறுப்பில் இருக்கும்போது, நண்பர்கள் அவரின் பிறந்த நாளைக் கொண்டாட விரும்பியபோது, தனது பிறந்த நாளை அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட ஆசிரியர்களின் உழைப்பை ப்

போற்றும் வண்ணம், ஆசிரியர் தினமாகக் கொண்டாட வேண்டும் என, டாக்டர் இராதாகிருணன் விருப்பம் தெரிவித்தார்.

அதன் வெளிப்பாடே நாம் ஆண்டுதோறும் செப்டம்பர் 5ல்
ஆசிரியர் தினமாகக் கொண்டாடி வருகிறோம். இந்த நன்னாளில் ஆசிரி யர்களுக்கு விருதுகள் வழங்கி, ஆசிரியர் பணியைப் போற்றி வருகிறோம்.

மறைந்த நாள்

1967ல் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற டாக்டர் இராதாகிருணன் சென்னையில் குடியேறி வாழ்ந்த அவர், 86வது வயதில் 1975ம் ஆண்டு ஏப்ரல் 17ம் நாள் மறைந்தார்.

கல்வி, உழைப்பு மூலம் உயர்ந்த இந்தியத் தலைவர்களில் இவரும் ஒருவர் என்பதை மறக்காதீங்க...!

சரி குட்டீஸ்...! கொஞ்சம் 'போர்' அடிச்சுருக்கும் புரியுது... சரி நாளை மறுநாள் உங்களுக்கு பிடித்தமான ஆசிரியருக்கு என்ன கிப்ட் கொடுத்து ஆச்சரியப்படுத்த போறீங்க...

உங்கள் ஆசிரியருக்கு நீங்கள் என்ன பரிசு வாங்கிக் கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தால், உங்களுக்கு நான் ஒரு டிப்ஸ் தர்றேன். எனக்கு நீங்க என்ன கிப்ட் தரப் போறீங்க...!

வழக்கமாக கொடுக்கும் 'கிப்ட்'களை விட, இயற்கை, அதுசார்ந்த பொருட்களால் தயாரிக்கப்பட்டதை கொடுத்து, உங்க ஆசிரியரை அசத்துங்க...!

சாக்லேட், டைரி மற்றும் பேனா, காற்றை தூய்மையாக்கும் செடிகள், வாழ்த்து அட்டை, புத்தகங்கள், பூக்கள் என, இந்த ஐட்டங்களை வாங்கி கொடுத்து, அசத்துலாம்.

பெருந்தகை குறித்து அறிவோம்...!

காற்றை தூய்மையாக்கும் செடிகள்

காற்றை தூய்மையாக்கும் சில வகை செடிகளை வாங்கி உங்கள் அறிவியல் ஆசிரியருக்கு நீங்கள் பரிசளிக்கும் போது, அது அர்த்தமுள்ளதாகவும், மதிப்புமிக்கதாகவும் இருக்கும். மேலும் உங்கள் மீதான நன்மதிப்பையும் ஏற்படுத்தும்.

பேனா

ஆசிரியர்கள் எப்போதும் அதிக நேரம், பேனா உபயோகிப்பவர்கள். எனவே அவர்களுக்கு நீங்கள் பேனாவுடன், டைரியும் சேர்த்து கொடுக்கலாம். இந்த பேனாக்களை தேர்வு செய்யும்போது, இயற்கை, பழமையான பொருட்களால் தயாரிக்கப்பட்ட பேனாக்களை தேர்வு செய்து கொடுத்து பாருங்கள் இந்த முறை.

புத்தகங்கள்

வாழ்வில் உங்களை மெருகேத்தும் முக்கிய நண்பன் புத்தகம். அதில் நல்ல புத்தகங்களை உங்கள் பெற்றோரிடம் கேட்டு தெரிந்து கொண்டு,
நல்ல பயனுள்ள ஒரு புத்தகத்தை வாங்கி கொடுத்து விடுங்கள். ஆழ்மனதில் இருந்து அன்பை வெளிப்படுத்தும், இது ஒரு உன்னதமான பரிசு என்பதை ஒரு போதும் மறக்கமாட்டார் உங்கள் ஆசிரியர்.

இயற்கை தயாரிப்பு

சாக்லேட்டுகள் ஒரு சிறந்த பரிசு. ஆகவே ஆசிரியருக்கு வித்தியாசமான சுவையுடைய சாக்லெட்டுகளை வாங்கியோ அல்லது தயாரித்தோ கொடுக்கலாம்.
மேலும், இதை நாம் தேர்வு செய்யும்போது, முக்கியமாக கவனிக்க வேண்டியது, இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டதா ? என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சந்தையில் விதவிதமாக கிடைக்கும் சாக்லேட்டுகளை காட்டிலும், வீட்டில் இருந்து நீங்களே உங்கள் பெற்றோருடன் இருந்து தயாரித்த சாக்லெட், இனிப்புகளை தயார் செய்து கொண்டு போய் கொடுத்து பாருங்களேன்.

வாழ்த்து அட்டை

தொழில்நுட்ப வளர்ச்சியால், வாழ்த்து அட்டை கொடுக்கும் போக்கும் மருவியுள்ளது. தற்போதைய நவீனத்தில் வண்ணமயமிக்க புகைப்படங்களுடன் வாசகங்கள் இடம்பெறும் வாழ்த்து அட்டைகளை நெடியில் அனுப்பி வைக்க முடியும்.

ஆனால் அதில் ஏற்படும் உயிர்ப்பை விட, மாணவர்கள் நீங்களே கையால் தயாரித்த வாழ்த்து அட்டையில், உங்கள் உணர்வில் இருந்து
ஆசிரியர் தினத்தை கொண்டாடும் வகையிலான கவிதைகளை எழுதிய வாழ்த்து அட்டை கொடுத்து பாருங்கள்.

ஆசிரியர்கள் சொல்லித் தரும் நல்விஷயங்களை கற்று, வாழ்வில் சிறந்தவர்களா ஆக வேண்டும் என்ற ஒன்றை நினைவில் நிறுத்தி செயல்பட்டு பாருங்கள். வானம் வசப்படும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
In independent India, among the teachers who see education as a duty, there are teachers who carry it with dedication and sow the seeds for the development of future generations.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X