கோடை விடுமுறை மாணவர்களுக்கு ஒரு மாதம்... ஆசிரியர்களுக்கு லீவு இருக்கா இல்லையா?

Posted By:

சென்னை : பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள பள்ளிகளுக்கான ஆண்டு செயல் திட்டத்தில் மாணவர்களுக்கான விடுமுறையை பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. ஆனால் ஆசிரியர்களின் விடுமுறைபற்றி விளக்கம் தர வேண்டும் என ஆசிரியர்கள் சங்க நிர்வாகி கூறியுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள பள்ளிகளுக்கான ஆண்டு செயல்திட்டத்தில் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையும், விடுமுறை எப்போது ஆரம்பிக்கும்? என்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோடை விடுமுறை மாணவர்களுக்கு மே மாதம் 1ந் தேதி முதல் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை மாணவர்களுக்கு ஒரு மாதம்... ஆசிரியர்களுக்கு லீவு இருக்கா இல்லையா?

ஆனால் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை என்பது கேள்விக்குறியாகவே பள்ளிகளுக்கான ஆண்டு செயல் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனென்றால், மே மாதம் 7, 8, 9, 10, 11, 21 ,22, 24, 25, 26, 28 ஆகிய தேதிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு குறித்து நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என்றால், அதில் ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டுமா? அப்படி கலந்து கொண்டால் ஆசிரியர்களுக்கு கோடைவிடுமுறை என்பது இல்லையா? என்ற கேள்வியும் எழுகிறது.

இதுகுறித்து ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளிடம் கேட்ட போது, பள்ளிகளுக்கான ஆண்டு செயல் திட்டத்தில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு குறித்து நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் தலைமை ஆசிரியர் கலந்து கொள்ள வேண்டுமா? அல்லது ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டுமா? என்பது குறித்து விளக்கம் அளிக்கவில்லை. இது குறித்து பள்ளி கல்வித்துறை விளக்கம் அளிக்க வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் கோடை விடுமுறையை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்க நிர்வாகி தெரிவித்துள்ளார்.

English summary
Above article mentioned about school teacher's summer vacation details.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia