வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்த ஆசிரியர்களுக்குத் தடை...!

Posted By:

சண்டிகர் : பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவன் ஒருவன் பிரதமருக்கு எழுதிய கடிதத்தை அடுத்து பள்ளி ஆசிரியர்கள் வகுப்பிற்குச் செல்லும் போது மொபைல் போன் எடுத்துச் செல்லுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில், பள்ளி மாணவன் ஒருவன், பிரதமருக்கு எழுதிய கடிதத்தை அடுத்து, வகுப்பிற்கு செல்லும்போது, மொபைல் போன் எடுத்துச் செல்ல, பள்ளி ஆசிரியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில், முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்.கிரஸ் ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், சண்டிகரில் உள்ள ஒரு அரசு பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன், வகுப்பில் பாடம் நடத்தும்போது, ஆசிரியரின் மொபைல் போனில் மணி ஒலிப்பதால், படிப்பதில் கவனச்சிதறல் ஏற்படுவதாக, பிரதமருக்கு கடிதம் மூலம் புகார் தெரிவித்திருந்தான்.

வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்த ஆசிரியர்களுக்குத் தடை...!

இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும்படி, மாநில கல்வித் துறைக்கு பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியது. இதையடுத்து, மாநில கல்வித் துறை, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் வகுப்பிற்குச் செல்லும் ஆசிரியர்கள் மொபைல் போன்களை எடுத்துச் செல்லக் கூடாது எனக் கூறியுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், வகுப்பறையில் மொபைல் போனை பயன்படுத்தக் கூடாது. ஆசிரியர்கள் வகுப்பிற்குள் செல்வதற்கு முன், தங்கள் மொபைல் போனை, வெளியில் வைத்து விட்டு செல்ல வேண்டும் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் வகுப்பு நடத்தும் நேரங்களில் மொபைல் போன்களை உபயோகப் படுத்துவதால் மாணவர்களின் கவனம் சிதறக்கப்படுகிறது என்ற பஞ்சாப் மாநில சிறுவனின் குற்றச் சாட்டிற்கு உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த மாநிலத்தில் ஆசிரியர்கள் மொபைல் போன்களை வகுப்பில் உபயோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

வகுப்பறைக்கு வெளியிலேயே ஆசிரியர்கள் தங்கள் மொபைல் போன்களை விட்டுவிட்டுச் செல்ல வேண்டும். வகுப்பு முடிந்ததும் ஆசிரியர்கள் தங்கள் மொபைல் போன்களை உபயோகப்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

English summary
A school student in Punjab has written a letter to the Prime Minister and a ban on mobile phone when school teachers go to class.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia