ஆசிரியர் தகுதித் தேர்வில் மனப்பாட கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி!

Posted By:

சென்னை : ஆசிரியர் தகுதித் தேர்வில் சிந்தித்து எழுதும் கேள்விகளே கேட்கப்படும். மனப்பாடம் செய்து எழுதும் கேள்விகளுக்கு இடமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதிக்கான டெட் தேர்வு 29 ஏப்ரல் மற்றும் ஏப்ரல் 30ம் தேதி நடக்கவிருக்கிறது. இதற்கான முன்னேற்பாடு வேலைகள் நடந்துக் கொண்டிருக்கின்றன.

இந்த வருடம் விடைத்தாள் திருத்தத்திலும் பெரும் கட்டுபபாடுகள் விதிக்கப்பட உள்ளன என அறிவிப்பு வெளியாகி உள்ளது. பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையங்கள்

பள்ளி மாணவர்களுக்கு தேர்வு முடிந்ததும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் டெட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட் உள்ளன. ஏப்ரல் 29ல் நடக்கும் இடைநிலை ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 598 பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. ஏப்ரல் 30ல் நடக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வுக்கு 1263 பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

பாதுகாப்பு முன்னேற்பாடுகள்

தேர்வு மையங்களுக்குள் மின்னணு சாதனங்கள் மற்றும் செல்போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்விற்கான வினாத்தாள்களை டிஆர்பி அதிகாரிகள் சரிப்பார்த்து அச்சிட அனுப்புயுள்ளனர். வினாத்தாள் லீக் ஆகாமல் இருக்க தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வருடம் தேர்வு சற்றுக் கடினமாக இருக்கும் என கூறப்படுகிறது.

டிஆர்பி அறிவிப்பு

டெட் தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்கள் குறைந்தது 20 ஆண்டுகளாவது பாடம் நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது என டிஆர்பி தெரிவித்துள்ளது. 20 ஆண்டுகளில்ஏற்படும் தொழில்நுட்ப வளர்ச்சி, புதிய படிப்புகளின் தேவை போன்றவற்றுக்கு ஏற்ப, பாடத்திட்டங்கள் மாறும்; பொது தேர்விலும் கட்டுப்பாடுகள் வரும். என டிஆர்வி அறிவித்துள்ளது.

டெட் தேர்வு

வரும் மாற்றத்தை சமாளித்து, அதற்கேற்ப மாணவர்களுக்கு பாடம் நடத்தும் தகுதியை, தற்போது, 'டெட்' தேர்வு எழுதும் ஆசிரியர்கள் பெற்றிருக்க வேண்டும். அதனால், அவர்கள் சிந்தித்து எழுதும் வகையில், வினாத்தாள் தயாரிக்கப்பட்டு உள்ளன. பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பாட புத்தகங்களின் உள்பகுதியில் இருந்தும், புதிய கேள்விகள் இடம் பெறும். மனப்பாட பகுதி கேள்விகள் குறைவாகவே இருக்க வாய்ப்பு உள்ளது. என டிஆர்பி தெரிவித்துள்ளது.

English summary
Teachers Recruitment Board Government of Tamil Nadu conducts as Teacher Eligibility Test - TET for recruitment of Teachers.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia