ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியிருக்கீங்களா? தேர்வுக்குரிய விடை வெளியீடு...!

Posted By:

சென்னை : ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-1, தாள்-2 கடந்த (ஏப்ரல்) மாதம் 29ந் தேதி மற்றும் 30ந் தேதிகளில் நடைபெற்றது. ஆசிரியர் தேர்வு வாரியம் அதற்கான விடைகளை வெளியிட்டுள்ளது.

தாள்-1 இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வாகும். இது ஏப்ரல் 29ந் தேதி நடைபெற்றது. இந்தத்தேர்வை 2 லட்சத்து 41 ஆயிரத்து 555 பேர்கள் தமிழகம் முழுவதும் எழுதினர்.

ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியிருக்கீங்களா? தேர்வுக்குரிய விடை வெளியீடு...!

தாள்-2 பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வாகும். இது ஏப்ரல் 30ந் தேதி நடைபெற்றது. இந்தத்தேர்வை 5 லட்சத்து 12 ஆயிரத்து 260 பேர்கள் தமிழகம் முழுவதும் எழுதினர்.

தற்போது இடைநிலை ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-1, மற்றும் பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-2 க்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக விடைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( trb.tn.nic.in ) வெளியிடப்பட்டுள்ளன.

இந்த தற்காலிக விடைகளின் மீது தேர்வர்கள் ஏதாவது ஆட்சேபனை தெரிவிக்க விரும்பினால் வருகிற 27-ந்தேதி மாலை 5-30 மணிக்குள் ஆசிரியர் தேர்வு வாரிய தகவல் மையத்தில் உள்ள பெட்டியிலோ அல்லது ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தபால் மூலமாகவோ கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள், மேற்கோள் புத்தகங்கள் ஆதாரம் மட்டுமே ஏற்கப்படும். கையேடுகள் மற்றும் தொலை தூர கல்வி நிறுவன ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

English summary
The Teacher Examination Board, Tamilnadu TET Paper, Paper No. 2 held on 29th and 30th of last month (April 30). The Teacher Board has issued its answers.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia