தனுவாஸில் எம்பிஏ படிப்புகள்!

Posted By:

சென்னை: தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில்(தனுவாஸ்) எம்பிஏ படிப்புகளுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எம்பிஓ பிரிவில் ஃபுட் அண்ட் லைவ்ஸ்டாக் பிசினஸ் மேனேஜ்மெண்ட் படிப்புகளை தனுவாஸ் அறிமுகம் செய்துள்ளது.

தனுவாஸில் எம்பிஏ படிப்புகள்!

இந்தப் படிப்பு பயில விரும்புவோர் பி.விஎஸ்சி, பிவிஎஸ்சி ஏஎச், பி.டெக்(ஃபுட் டெக்னாலஜி / டெய்ரி டெக்னாலஜி / பௌல்ட்ரி டெக்னாலஜி), பி.எஃப்.எஸ்சி, பி.எஸ்சி(அக்ரி / ஹார்ட்டிகல்ச்சர்), பி.டெக்(ஃபுட் என்ஜினீயரிங் / அக்ரிகல்ச்சர் என்ஜினீயரிங்) ஆகிய படிப்புகளில் ஏதாவது ஒரு படிப்பை முடித்திருக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகங்கள், வேளாண் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் இந்தப் படிப்பை முடித்திருக்கவேண்டும்.

இந்தப் படிப்பை பயில விரும்புவோர் ரூ.1,000(இதர பிரிவினர்) விண்ணப்பக் கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தைப் பெறலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500 ஆகும்.

இந்தத் கொகைக்கு கேட்புக் காசோலையை சென்னையில் மாற்றத்தக்கதாக "Finance Officer, TANUVAS, Chennai-51" என்ற பெயரில் எடுக்கவேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை Chairman, Admission Committee Tamil Nadu Veterinary and Animal Sciences University, Madhavaram milk Colony-600051 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். ஆகஸ்ட் 12-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். செப்டம்பர் 1-ம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.

மேலும் விவரங்களுக்கு http://www.tanuvas.tn.nic.in/ என்ற பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Tamil Nadu Veterinary and Animal Sciences University (TANUVAS), Chennai has invited applications for admission to Master of Business Administration (MBA) in Food and Livestock Business Management programme. Admission is offered for the session 2015.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia