இம்மாத இறுதிக்குள் “டான்செட்” முடிவுகள்- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

Posted By:

சென்னை: பொறியியல் மற்றும் எம்.பி.ஏ, எம்.சி.ஏ போன்ற மேற்படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத்தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பொறியியல் மற்றும் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் எம்.சி.ஏ, எம்.பி.ஏ, எம்.இ, எம்.டெக் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 16, 17 ஆம் தேதிகளில் நடைபெற்றது.

இம்மாத இறுதிக்குள் “டான்செட்” முடிவுகள்- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

இத்தேர்வில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

தற்போது மதிப்பீட்டு பணிகள் நடைபெற்று வருவதால் இம்மாத இறுதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை பிரிவு இயக்குனர் ஜி.நாகராஜன் தெரிவித்தார்.

English summary
TANCET stands for the TAMIL NADU COMMON ENTRANCE TEST was conducted in the month of MAY on dated 16th and 17th of MAY for the year 2015 in the state of TAMIL NADU in different venues as defined by the ANNA UNIVERSITY. The results will announce in this month end.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia