அண்ணா பல்கலைக்கழக டான்செட் நுழைவுத் தேர்வு முடிவு வெளியீடு

Posted By:

சென்னை: எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான், படிப்புகளில் சேருவதற்காக அண்ணா பல்கலைக்கழகத்தால் டான்செட் நுழைவுத்தேர்வு (26.03.2017) அன்று நடத்தப்பட்டது.

மாணவ மாணவியர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த டான்செட் தேர்வு முடிவு இன்றுகாலை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக டான்செட்  நுழைவுத் தேர்வு முடிவு வெளியீடு

எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான், எம்.பி.ஏ, எம்.சி.ஏ, போன்ற முதுகலைப்படிப்புகளை அரசு ஒதுக்கீட்டில் தமிழக கல்லூரிகள் படிப்பதற்காக அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வு டான்செட் தேர்வாகும்.

டான் செட் நுழைவுத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் 15 நகரங்களில் மற்றும் 32 துணை மையங்களில் 26/03/2017ம் தேதி நடத்தப்பட்டது.

டான்செட் நுழைவுத் தேர்வு முடிவுகளை மாணவ மாணவியர்கள் www.ExamResults.net, www.TamilNaduEducation.net என்ற இணையதள முகவரிக்குச் சென்று தெரிந்து கொள்ளலாம்.

மேலக் குறிப்பிட் இணையதள முகவரிக்குச் சென்று தங்கள் யூசர் ஐடி மற்றும் பார்ஸ்வேர்டு ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுடைய தேர்வு முடிவுகளைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

English summary
Tamilnadu Common Entrance Exam Tancet. The Exam is Conducted to Proper Allocation of MBA, MCA, M.E, M.Tech, M.Arch, M.Planing seats Available in Tamilnadu. Tancet Exam result declared today at www.ExamResults.net, www.TamilNaduEducation.net.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia