டான்செட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் தயார்...!!

Posted By:

டெல்லி: தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கான (டான்செட் 2016) ஹால் டிக்கெட்டுகள் தயார் நிலையில் உள்ளன. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஹால் டிக்கெட்டுகளை தற்போது டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

டான்செட் நுழைவுத் தேர்வு எழுதி வெற்றி பெறுபவர்கள் எம்பிஏ, எம்சிஏ, எம்.இ., எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய படிப்புகளில் சேர்ந்துகொள்ள முடியும்.

இந்தத் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் https://www.annauniv.edu/ என்ற இணையதளத்துக்குச் சென்று ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

டான்செட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் தயார்...!!

இந்தத் தேர்வுகள் ஜூன் 11, 12-ம் தேதிகளில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படுகிறது.

இணையதளத்துக்குச் சென்று பெயர், ஐடி, பதிவு எண் போன்ற விவரங்களைக் கொடுத்து ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோடு செய்யலாம்.

ஹால் டிக்கெட்டுகளை தவற விடுவோர் தங்களது டூப்ளிகேட் ஹால் டிக்கெட் காப்பியை ரூ.100 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

இந்த வங்கியில் டி.டி.யாக எடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

எம்பிஏ, எம்சிஏ தேர்வுகள் ஜூன் 11-ம் தேதியும், எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய தேர்வுகள் ஜூன் 12-ம் தேதியும் நடைபெறும்.

English summary
Tamil Nadu Common Entrance Test (TANCET) 2016 admit cards are released. Registrants can download admit cards from the official website. How to download admit cards? Visit the official website Click on 'Download hall ticket' On the next page, enter your user ID and password Click on 'login' Admit Card will appear on the screen Take print out of the same for future reference The exam will be conducted on June 11 and 12, 2016 by Anna University, Chennai on behalf of the Government of Tamil Nadu. The entrance exam is conducted to offer admissions in MBA, MCA, ME/M.Tech/M.Arch/M.Plan programmes. Candidates, who have misplaced their TANCET 2016 admit cards can procure duplicate copy of the same on payment of Rs 100, through a Demand Draft, obtained from any nationalised bank. DD should be drawn in favour of 'The Secretary, TANCET, Anna University, Chennai', payable at Chennai.Important Dates Exam Dates are as follows: MBA/MCA programmes: June 11, 2016 M.E/M.Tech/M.Arch/M.Plan programmes: June 12, 2016

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia